வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம்
சென்னை:
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை தடை செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடி காலவரையற்ற வேலை நிறுத்தம்,உண்ணாவிரதம், நீதிமன்றத்துக்குள் ஊர்வலம் என போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் ஜூலை 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளைவிதித்தது. அதன்படி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதோ, ஊர்வலம் போவதோ, நீதிமன்றப் புறக்கணிப்புமேற்கொள்வதோ கூடாது.
நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது. அவர்கள் மீது புகார் கூறக் கூடாது. அவர்களைப்புறக்கணிக்கக் கூடாது உள்பட 25 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் வழக்கறிஞர்கள்நீதிமன்றங்களில் பணியாற்ற ஒரு வருடம் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், புதியகட்டுப்பாடுகளை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.
மேலும் தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாகஈரோட்டில் கூடி வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கட்டுப்பாடுகள் நிறுத்திவைப்பு: நீதிமன்றம்
இதற்கிடையே, வழக்கறிஞர்களுக்கு வித்க்கப்பட்ட 25 கட்டுப்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகசென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை எதிர்தது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில்இறங்கியதால், வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டகட்டுப்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகம்தெரிவித்துள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications