தீவிரவாதிகள்: டெல்லி அமெரிக்க தூதரகம் மூடல்
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகம் இன்று மூடப்பட்டது.
நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி ஆகிய அமெரிக்க நகர்களையும், இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர்ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்கள், முக்கிய கட்டடங்கள் மற்றும் விஐபிக்கள் மீதும் அல்கொய்தா மற்றும் பிறதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய அரசுக்கு அமெரிக்க உளவுப் பிரிவினர் எச்சரிக்கைகொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்றுமூடப்பட்டது. இது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பாதுகாப்பு காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் தூதரகம் மூடப்படுகிறது. விசா தொடர்பாக தூதரகம் வரஅழைக்கப்பட்டவர்களுக்கு பிறிதொரு நாளில் நேரம் ஒதுக்கப்படும்.
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத் தீவிரவாத அமைப்பு, அல் கொய்தா, லஷ்கர்-ஏக-தொப்யா ஆகிய அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைச்சேர்ந்த மனித வெடிகுண்டுகள் இந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பெங்களூர், மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications