திருச்சி: கல்லூரிக்குள் மாணவி வெட்டி கொலை
திருச்சி:
திருச்சி ரீஜினல் இன்ஜீனியரிங் கல்லூரி மாணவி ஒருவர், வகுப்பறையில் இன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இன்று காலை இந்தக் கொடூரசம்பவம் நடந்தது.
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் (ரீஜினல் இன்ஜீனியரிங்காலேஜின் புதிய பெயர் இது) எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்தவர் அகிலா (22). இவர் பெல் குடியிருப்பைச் சேர்ந்தகோதண்டராமன் என்பவரது மகளாவார்.
அதே பகுதியில் வசித்து வந்த அய்ப்பன் என்பவரது மகனான பரத்வாஜ் (23), துவாக்குடியில் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் இரண்டரை வருடங்களாகக் காதலித்துள்ளார்கள். இடையில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பரத்வாஜைப்பார்ப்பதை அகிலா தவிர்த்துள்ளார். ஆனால் பரத்வாஜ் விடாமல் அகிலாவை விரட்டிக் கொண்டிருந்தார்.
சமீபத்தில் அகிலாவின் வீட்டுக்குச் சென்ற பரத்வாஜ், அவரது தந்தை கோதண்டராமனிடம், அகிலாவை மணமுடித்துத் தரும்படிகேட்டுள்ளார். அதற்கு அவர், அகிலாவின் படிப்பு முடிந்ததும்தான் திருமணம் பற்றி பேச முடியும் என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து நேற்று மாலை அகிலா படிக்கும் கல்லூரி வாசலில் வந்து, உங்க அப்பா நம் திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார் போல்தெரிகிறது. நாம் எங்காவது ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ளலாம். நாளைக் காலை நாம் ஒடிப் போகலாம். நீ வராவிட்டால்உன்னைக் கடத்திக் கொண்டு போயாவது திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.
இதை தனது அப்பாவிடம் சொல்லியிருக்கிறார் அகிலா. இதனையடுத்து இன்று காலை அகிலா கல்லூரிக்கு வரும்போது அவரது அப்பாவும்கல்லூரி வரை துணைக்கு வந்து அகிலாவை வகுப்பறையில் விட்டு விட்டுப் போயிருக்கிறார்.
இந் நிலையில், அகிலா தனது வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, அவரைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று பியூன் கூறியுள்ளார்.யார் என்பதைப் பார்க்கப் போன அகிலா அங்கு பரத்வாஜ் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அப்படியே திரும்பி வகுப்பறைக்குத் திரும்பிப்போக முயன்ற போது, பரத்வாஜ் ஏதோ பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தான் கொண்டு வந்த கத்தியால் அகிலாவின் வயிற்றில் குத்தியுள்ளார் பரத்வாஜ். கத்திக் காயத்துடன் உயிர் பிழைக்கவகுப்பறைக்குள் ஓட அகிலா முயன்றபோது, வெறி அடங்காத பரத்வாஜ் அவரது கழுத்திலும் பலமாகக் குத்தினார். கத்தி ஆழமாக கழுத்தில்ஊடுறுவியதால் அகிலா அந்த இடத்திலேயே விழுந்தார். அந்த இடம் படிக்கட்டு என்பதால், அப்படியே படிகளில் உருண்டு படிக்கட்டின் கீழ்தளத்தில் வந்து விழுந்து, இறந்தார் அகிலா.
இதனையடுத்து பரத்வாஜ் தப்ப முயன்றிருக்கிறார். அகிலா ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், பரத்வாஜ் ரத்தக் கறை படிந்த சட்டையுடன்தப்ப முயல்வதையும் பார்த்த கல்லூரி மாணவர்கள் பரத்வாஜைத் துரத்திப் பிடித்தனர்.
சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து பரத்வாஜைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதன்பின்பு அகிலாவின் வீட்டுக்குத் தகவல் தரப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications