இந்தோனேஷியா: இந்தியருக்கு மரண தண்டனை
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்,இன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாார்.
1994ம் ஆண்டு 12 கிலோ ஹெராயின் கடத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த அயோத்ய பிரசாத்செளபே என்பவர் சுமத்ரா தீவுகளில் உள்ள மெடான் நகர விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
இவருக்கும் உடன் கைது செய்யப்பட்ட இரு தாய்லாந்து நாட்டினருக்கும் 1996ம் ஆண்டில் மரணதண்டனை வழங்கியது இந்தோனேஷிய நீதிமன்றம்.
இவர்களை மன்னித்து, தண்டனையைக் குறைக்குமாறு இந்தியத் தூதரகமும், லண்டனில் உள்ள மனிதஉரிமை அமைப்புகளும் இந்தோனேஷிய அரசுக்கு கோரிக்கைகள் விடுத்திருந்தன.
மேலும் செளபே மீதான வழக்கு விசாரணை நியாயப்படி நடக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.இந் நிலையில் இன்று செளபேயின் மரண தண்டனையை இந்தோனேஷியா நிறைவேற்றியது.
உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 2 மணியளவில், 10 மீட்டர் தூரத்தில் இருந்து போலீசாரால்துப்பாக்கியால் இதயத்தில் சுடப்பட்டு செளபே கொல்லப்பட்டார். 2001ம் ஆண்டுக்குப் பின் அந்நாட்டில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.
கொல்லப்பட்ட செளபே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.
செளபேயுடன் கைது செய்யப்பட்ட, தாய்லாந்தைச் சேர்ந்த மற்ற இருவரும் இதே போன்றமரணத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
அதே போல மேலும் பல போதைக் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 65 பேருக்கும்இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications