திருடர்களிடம் கொள்ளையடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கொள்ளையடித்த பணத்தில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு 4 கொள்ளையர்களை தப்பவிட்ட 2 மதுரைகாக்கிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் ரூ.70,000 பணம் மற்றும் ஒரு செல்போனை,இந் நிறுவனத்தின் முன்னாள் டிரைவரான செல்வக்குமார், வாட்ச்மேனாக இருந்த முருகேசன் மற்றும் முருகன்,ரமேஷ் ஆகிய 4 பேர் சேர்ந்து கொள்ளையடுத்தனர்.

இவர்கள் மதுரைக்கு தப்பி வந்ததாக வந்த தகவலை மதுரை போலீசாருக்கு நத்தம் போலீசார் தெரிவித்தனர்.இதனையடுத்து ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கரிமேடு போலீஸார் சோதனை நடத்தியபோதுசெல்வகுமார் உள்பட நால்வரும் பிடிபட்டனர்.

அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களிடம் ரூ. 29,000 பணத்தை போலீசார் வாங்கிக் கொண்டுமதுரை போலீஸார் அவர்களை தப்பவிட்டனர். ஆனால், இந்த நால்வரையும் நத்தம் போலீசார் மடக்கிப்பிடித்துவிட்டனர்.

அப்போது அவர்கள் தந்த வாக்குமூலத்தில் மதுரை போலீசார் பணத்தை பிடுங்கிக் கொண்ட விவரம் தெரியவந்தது.

இதனையடுத்து கரிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முருகேசன், பாண்டித் தேவர் ஆகியோரிடம் விசாரணைநடத்த நத்தம் போலீசார் வந்தனர். அதற்குள் விஷயம் தெரிந்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

ஒருவழியாய் இவர்களைத் தேடிப் பிடித்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தியபோது முதலில் திருடர்களைப்போலவே குற்றச்சாட்டை மறுத்தனர். பின்னர் ரூ. 29,000 பணத்தைத் தந்து விடுவதாகவும், இந்த பிரச்னையைமுடித்து வைக்கும்படியும் கூறி பணம் தந்தனர். மேலும் லஞ்சமாக சில ஆயிரத்தை வெட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

விவரம் அறிந்து டென்சனான அதிகாரிகள், பாண்டி மற்றும் முருகேசன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து,அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

தமிழத்தில் தினந்தோறும் கொலைகளும் கொள்ளைகளும் நடந்து மாநிலமே அல்லோலப்பட்டு வரும் நிலையில்கொள்ளையர்களிடமே கொளளையடித்து அவர்களை தப்பவிட்ட போலீசாரை என்னவென்று சொல்வது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+