ரெளடி கொலையில் இன்ஸ்பெக்டர்களுக்கு தொடர்பு?
திருச்சி :
திருச்சியில் நடந்த மூன்று கொலைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேருக்குத் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ரெளடிகள் கொலையில் ஒரு சப் இன்ஸ்பெக்டரே கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் நடந்தகொலைகளிலும் போலீசாருக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திருச்சி மாநகர்மாவட்ட செயலாளர் சேட்டு என்ற இரும்பொறையும் அவருடன் வந்த டிங்கி, சுரேஷ் ஆகியோரும் வெட்டிக்கொல்லப்பட்டனர். அவர்கள் வந்த காரை வழி மறித்த கும்பல் மூவரையும் கண்டந்துண்டமாக வெட்டிக் குதறியது.ஒருவரது தலையை துண்டாக்கிவிட்டுப் போனது.
இந்த முக்கொலை வழக்கில் பிரபல ரெளடி முட்டை ரவி உள்ளிட்ட 4 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம்இருந்த செல்போனில் கடைசியாகப் பேசிய 30 நம்பர்களை போலீஸ் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தமிழகம்முழுவதும் உள்ள மேலும் 26 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில் சேட்டு உள்ளிட்ட 3 ரவுடிகளின் கொலையில் கள்ளர் இனத்தைச் சேர்ந்த திருச்சி இன்ஸ்பெக்டர்கள்ஞானசேகரன், ரவீந்திரன், சாமிநாதன், கந்தசாமி ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தலித் இனத்தைச் சேர்ந்த சேட்டு கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு வழக்குவிசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக டாடா சுமோவில் வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர்ஞானசேகரன், தனக்கு கீழ் பணிபுரியும் எஸ்.ஐ. ஒருவரை அனுப்பி தன்னை சந்திக்க வருமாறு சேட்டிடம்கூறியுள்ளார்.
இப்போது வர முடியாது; வழக்கு விசாரணை முடிந்த பின் வருகிறேன் என்று சேட்டு கூறியுள்ளார். இதனால்ஆத்திரமடைந்த ஞானசேகரன், சேட்டு வந்த டாடா சுமோ காரை சோதனையிட்டு, அந்த காரில் ஆயுதம் வைத்துஇருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்த உளவுத் துறை போலீசார், இது குறித்து மேலதிகாரிகளின்கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சேட்டு கொலையில் சரணடைந்த முட்டை ரவி உள்ளிட்ட நான்கு பேரிடம் திருச்சி புறநகர் போலீசார் விசாரணைநடத்தியபோது, சேட்டை கொலை செய்ததற்கான காரணம், கொலை செய்தது யார், யார், இதில் போலீஸ்அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்த விவரங்களும் தெரியவந்தன.
அதனடிப்படையில் நான்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடமும் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
சேட்டு கொலை செய்யப்பட்டதற்கு முன்னதாக முட்டை ரவியுடன் நடிகர் அலெக்சும் தொடர்பு கொண்டுபேசியிருக்கிறார். இதையும் கண்டுபிடித்துள்ள போலீஸார், அலெக்ஸை விசாரிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறார்கள். திருச்சியில் வட்டி பிஸினஸ் செய்து வரும் அலெக்ஸை கொலை செய்யப்பட்ட சேட்டுஅவ்வப்போது மிரட்டி பணம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications