காவிரியில் திடீர் வெள்ளம்: அபாய எச்சரிக்கை
சேலம்:
கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தின் காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கர்நாடகஅணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவற்றைத்திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு.
இதனால் தமிழகத்துக்கு வரும் நீரில் அளவு திடீரென மும்மடங்காகி உள்ளது.
இதையடுத்து ஓகேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டுகிறது. இதனால் அதில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் பச்சானி அறிவித்துள்ளார்.
இதனால் சுற்றுலா வரும் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல், கொட்டும் நீரை மட்டும் தூரத்தில்இருந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
நீர் வரத்து மேலும் அதிகமானால், கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ளம் பரவும் அபாயம்நிலவுவதால், தர்மபுரி மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பானஇடங்களுக்குச் சென்றுவிடுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கபினி அணையிலிருந்து வி-நாடிக்கு 42,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தற்போது மேட்டூர்அணையை அடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று ஒரே -நாளில் 3 அடி உயர்ந்தது.
பிற்பகல் நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளவு120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 35,750 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் தற்போது 40டிஎம்சி தண்ணீர் அளவுக்கு இருப்பு உள்ளது.
இதற்கிடையே ஹேரங்கி அணையிலிருந்து வெளியாகும் உப நீர் கிருஷ்ணராஜ சாகருக்கு மாற்றி விடப்படுகிறது.இந்த தண்ணீரின் வரத்து காரணமாக கிருஷ்ணராஜ சாக-ரின் நீர் இருப்பு அதிக-ரித்துள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அங்கிருந்து வி-நாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்தநீரும் மேட்டூர் அணைக்கே வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் மேட்டூர் அணையை தமிழக அரசு திறக்கும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள்எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஜூலை 12ம் தேதியே குறுவை சாகுபடிக்காகதிறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூரை குறைந்த அளவு நீர் இருப்பை சுட்டிக் காட்டி தமிழக அரசுதிறக்கவில்லை.
இதனால் குறுவை நெல் சாகுபடியை இழந்துவிட்ட தஞ்சை, நாகை, கடலூர், திருச்சி, திருவாரூர்மாவட்ட விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இப்போது மேட்டூர் திறக்கப்பட்டால் அடுத்த சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கமுடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி நாளை திமுகதலைமையில் எதிர்க் கட்சிகள் அரசு அலுவலகங்கள் முன் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளன.
இந் நிலையில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அணை விரைவில் திறக்கப்படும்என்று தெரிகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications