இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக்
கொல்கத்தா:
3 நாடுகள் கிரிக்கெட், நாட் வெஸ்ட் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைசேர்ந்த இளம் வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்போட்டித் தொடர் ஹாலந்தில் வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதனையடுத்து இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதும் நாட்வெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரைநடக்கிறது.
இந்தத் தொடர் முடிந்தவுடன் ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டி இங்கிலாந்தில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது.
இந்த 3 தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை கொல்கத்தாவில் கிர்மானி தலைமையிலான தேர்வுகுழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
அணியில் இருந்து ஜாகீர்கான், பார்த்தீவ் படேல் நீக்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் அகார்கர், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் (19)புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பொறியியல் கல்லூரி மாணவரான இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும்விக்கெட் கீப்பர் ஆவார்.
3 நாடுகள் மற்றும் நாட்வெஸ்ட் போட்டிகளில் விளையாட ரோகன் கவாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.சி.சி.போட்டிகளில் அவர் இடம்பெற மாட்டார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:
கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக், வி.வி.எஸ். லட்சுமண், இர்பான் பதான், ஆசிஷ்நெக்ரா, யுவராஜ்சிங், முகமது கயூப், எல்.பாலாஜி, தினேஷ் கார்த்திக், அகார்கர், ஹர்பஜன்சிங், கும்பிளே, ரோகன்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications