கோவை, ஸ்ரீரங்கம் பள்ளிகளில் வெடிகுண்டு புரளி
கோவை - திருச்சி:
சென்னையைத் தொடர்ந்து இன்று கோவை, ஸ்ரீரங்கம் நகர்கள் -முழுவதும் இன்று பள்ளிக் கூடங்களில் வெடிகுண்டுபுரளிகள் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சென்னை -நகர பள்ளிகள் பலவற்றில் வெடிகுண்டு புரளி கி-ளப்-ப-ப்-பட்-ட-து. இதனால் மாணவ,மாணவியர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். பெற்றோர்கள் வேதனை அடைந்தனர்.
இந் நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மெட்குலேஷன் பள்ளிக்கு காலையில் தொலைபேசிமூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும்வெளியேற்றப்பட்டனர்.
போலீஸ் சோதனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் பொய்யானது எனத் தெ-ரிய வந்தது. ஆனால்இந்தப் புரளி சரவணம்பட்டியுடன் நிற்காமல் -நகர் -முழுவதும் பரவியது. குறிப்பாக மா-நகராட்சிப் பள்ளிகள்அனைத்திலும் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் பரவியது.
இதையடுத்து பெற்றோர்கள் பீதியடைந்து தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு விரைந்து சென்றுபிள்ளைகளை வெளியே அனுப்புமாறு கோ-ரிக்கை விடுத்தனர். வெடிகுண்டு எதுவும் இல்லை என்று ஆசி-ரியர்கள்கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
இதனால் பிற்பகலுக்கு மேல் அனைத்துப் பள்ளிகளுக்-கும் விடு-முறை விடப்பட்டன. பெற்றோர்கள், தங்களதுபிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
அதே பேலே ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பெண்கள் பள்ளி, மேலும் பல தொடக்கப் பள்ளிகளிலும்குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து பெற்றோர் பதைபதைத்தபடிபள்ளிகளுக்கு ஓடினர்.
ஆசிரியர்கள் சமாதானம் சொல்லியும் கேட்காமல் வகுப்புகளில் புகுந்து குழந்தைகளை இழுத்துச் சென்றனர். பலஇடங்களில் பெற்றோர்கள் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் காயமடைந்தனர்.
இதையடுத்து இந்தப் பள்ளிகளில் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால்,குண்டுகள் ஏதும் சிக்கவில்லை.
இந்தப் புரளிகளால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் நிம்மதியிழந்து தவிக்கும் சூழல்நிலவுகிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications