இலங்கை: 8 ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு
ராமேஸ்வரம்:
இலங்கை மீனவர்களால் பிடித்துச் செல்லப்பட்டு நடுக் கடலில் தவிக்க விட்டுச் செல்லப்பட்ட 8 ராமேஸ்வரம்மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த புவனேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 2 படகுகளில் 8 மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்ட படகுகளில் இலங்கை மீனவர்கள்தமிழக மீனவர்களை தாக்கினர்.
பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடித்து விட்டு அவர்களை பிடித்துச் சென்றனர். பேச்சாலைஎன்ற பகுதியில் கடல் திட்டுக்களில் தமிழக மீனவர்களை விட்டு விட்டுச் சென்றனர்.
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 பேரையும் இந்திய கடலோரக் காவல் படை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தது.
நாகை மீனவர்கள் கதி?:
அதே போல நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் செவ்வாய்க்கிழமையன்றுகடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளனர்.
இதனால் நாகை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள்விரைவான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பெரும் போராட்டத்தில் குதிப்போம் என மீனவர் அமைப்பின்பிரதிநிதியான மங்கையர்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications