சென்னை டாக்டர்கள் நாகர்கோவில் டிரான்ஸ்பர்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்னையிலிருந்து 60 டாக்டர்கள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1,195 மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க கவுன்சிலிங் இன்று தொடங்கியது. நாகர்கோவில்,தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகள் உள்பட 12 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வரும் 18ம்தேதி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
நாகர்கோவில் மருத்துவ கல்லூரிக்கு சென்னையில் இருந்து அனாடமி, பதாலஜி, கம்யூனிட்டி மெடிசின்,பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, எம்.எஸ். (பொது அறுவை சிகிச்சை) துறைகளை சேர்ந்த 60 உதவி கூடுதல்பேராசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் வருகிற 16ம் தேதி நாகர்கோவில் மருத்துவகல்லூரியில் பணியில் சேருகிறார்கள்.
தூத்துக்குடி, நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்கு மதுரையில் இருந்து டாக்டர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 மருத்துவ கல்லூரிகளுக்கும் 4 மாதங்களில் புதிய டாக்டர்கள் நியமனம்செய்யப்படுவார்கள். அப்போது இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் மீண்டும் பழைய இடங்களுக்குத்திரும்புவார்கள் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
