வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் கைது
சேலம் - திருச்சி:
சேலம் பாலிடெக்னிக்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் கைது செய்யப்பட்டார்.
சேலம், அருகே உள்ள மல்லூர் என்ற இடத்தில் சேலம் பாலிடெக்னிக் உள்ளது. இந்த பாலிடெக்னிக்கிற்குவியாழக்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பாலிடெக்னிக்கில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. இன்னும் அரை மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மல்லூர் போலீஸார், மோப்ப நாய்கள், குண்டுகளை அறியும் படையினருடன் விரைந்து வந்தனர்.ஆனால் தீவிர சோதனையின் முடிவில் வெடிகுண்டு தகவல் புரளி எனத் தெரிய வந்தது.
பாலிடெக்னிக்கில் உள்ள தொலைபேசியில் பேசியவரை அறியும் காலர் ஐடி மூலம் தொலைபேசி அழைப்புபனைமரத்துப்பட்டியிலிருந்து வந்தது தெரியவந்தது. அந்த பொது தொலைபேசி மையத்திற்கு சென்றுஉரிமையாளடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது சேலம் பாலிடெக்னிக்கை சேர்ந்த ஒரு மாணவன்தான் அந்த நேரத்தில் போனில் பேசியதாகஉரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து தொலைபேசி மைய உரிமையாளரை பாலிடெக்னிக்கு அழைத்துச்சென்ற மல்லூர் போலீஸார், மாணவர்களை நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
இதில் நசர்கான் என்ற மாணவர்தான் தொலைபேசியில் பேசியது என தொலைபேசி மைய உரிமையாளர்அடையாளம் காட்டினார். பின்னர் போலீஸார் நசர்கானை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது,தான்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என கான் ஒத்துக் கொண்டார்.
தனது வீட்டுப் பாடத்தை சரியாக முடிக்காத காரணத்தால் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிபாலிடெக்னிக்கிற்கு விடுமுறை விட வைத்ததாக கான் விசாரணையின்போது ஒத்துக் கொண்டார்.
9 மாணவிகள் காயம்:
இதற்கிடையே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்தது. இதையடுத்து மாணவிகள் பதறியடித்து ஓடி வந்தனர். இதில் 9 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிகாயமடைந்தனர்.
உடனடியாக 9 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்களில் 6 பேர்ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சுதர்சன லட்சுமி என்ற 9வது வகுப்பு மாணவி சுய நினைவிழந்த நிலையில் தனியார்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பாண்டியன் காயமடைந்த பிள்ளைகளைப் பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வெடிகுண்டு புரளி குறித்த தகவல் பரவியதும், மாணவிகளின்பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
தங்களது குழந்தைகளை அனுப்புமாறு கோரியுள்ளனர். ஆனால் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றுபள்ளி நிர்வாகிகள் மறுத்தும் கூட, அவர்கள் விடவில்லை. வெளியில் இருந்தபடியே எல்லோரும் வெளியேறும்படிஅவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இதனால் பயந்து போன மாணவிகள் வேகமாக வெளியே ஓடி வந்தபோது நெரிசல் ஏற்பட்டு இந்த 9 பேரும்காயமடைந்துள்ளனர் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications