கும்பகோணம்: விசாரணை விரைவில் தொடக்கம்
கும்பகோணம்:-
கும்பகோணம் தீவிபத்து தொடர்பான தனது விசாரணையை நீதிபதி சம்பத் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளார்.
கும்பகோணம் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள்பலியானார்கள். இது தொடர்பாக பள்ளி தாளாளர், கல்வி அதிகாரிகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் தலைமையில் ஒருவிசாரணை கமிஷனை முதல்வர் ஜெயலலிதா கடந்த 19ம் தேதி நியமித்தார்.
இந் நிலையில் கும்பகோணம் சென்ற நீதிபதி சம்பத், தீவிபத்து நடந்த பள்ளியை பார்வையிட்டார். பின்னர்கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 குழந்தைகளைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீவிபத்துக்கான காரணத்தை விசாரணை மூலம் தெளிவுபடுத்த முஐயும். சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகியஇடங்களில் விசாரணை நடைபெறும், ஓரிரு வாரங்களில் விசாரணை தொடங்கும் என்று கூறினார்.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல்இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்து நீதிபதி சம்பத் 4 மாதத்திற்குள்தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications