ஜெ. ஆட்சி தானாகவே கலையும்: ஸ்டாலின்
நாமக்கல்:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை நாங்கள் கலைக்க வேண்டியதில்லை;அவர்களாகவே கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டிய நிலை வரும் என்று திமுக துணைப் பொதுச் செயலர்ஸ்டாலின் கூறினார்.
நாமக்கல்லில் நடந்த திமுக சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழக அரசியல் வரலாற்றிலேயே எந்த அணிக்கும், எப்போதும் கிடைக்காத வெற்றி, திமுக தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குக் கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்தது.
தமிழக அரசுக்கு மக்களவைத் தேர்தல் நல்ல பாடம் கற்பித்துள்ளது. சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்என்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தேன்.
அதற்காக ஜெ. ஆட்சியை நாம் கலைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களாகவே கலைத்துவிட்டு, தேர்தல்நடத்த வேண்டிய நிலை வரும். அது எப்படி என்றெல்லாம் கூறத் தேவையில்லை.
அவ்வாறு தேர்தல் வரும்போது திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்என்பதை யாராலும் மாற்ற முடியாது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை மிக மோசமாகவுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்கள்அதிகரித்துள்ளன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறையினரது குடியிருப்புகளிலேயே கொள்ளைநடக்கிறது.
இத்தகையை சூழலை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவே சைக்கிள் பேரணிநடத்தப்படுகிறது என்று பேசினார் ஸ்டாலின்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications