தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை சிறப்பான முறையில்பரமாரிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாட்டைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பெரிய அளவில் எந்த வகுப்புக் கலவரங்களும் நடைபெறவில்லை. தடை செய்யப்பட்டஇயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறையில் இறப்பதும், போலீஸ் துப்பாக்கிச் சூடும்குறைந்துள்ளன. மேலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சட்ட ஒழுங்கு இவ்வாறு சிறப்பாக இருக்கும்போது, எங்கோ நடக்கும் ஓரிரு குற்றங்களை பத்திரிக்கைகள்வாயிலாக பெரிதுபடுத்திப் பார்க்கிறார்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு சட்ட ஒழுங்கை மேலும் சிறப்பாகபேண வேண்டும். ஏனென்றால், சட்ட ஒழுங்கு பராமரிப்பின் வாயிலாகத்தான் மாநிலத்தின் முன்னேற்றத்தைஅமைக்க முடியும்.

கடந்த மாதம் கும்பகோணத்தில் நடந்த தீவிபத்து, பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்புநடவடிக்கைகள் குறித்து நமக்கு உணர்த்தியுள்ளது. அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாவட்டஆட்சியர்களும், காவல்துறையினரும் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளக் கூடாது.

பணப் பற்றாக்குறையை தமிழக அரசு சிறப்பாக சமாளித்ததால், 2001-02ல் ரூ.5,200 கோடியாக இருந்த திட்டமதிப்பீடு, இந்த ஆண்டு ரூ.8,001 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்வதில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கியப்பங்காற்ற வேண்டும். துறைச் செயல்பாடுகள் விரைவாக இருக்கும் வகையில் ரூ.58.10 கோடி மதிப்பில் மின் அரசுநிர்வாகத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.

மனித வள மேம்பாட்டில் இந்தியாவில் 3 இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்தவிலைக்கு அரிசி தருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுக் கட்டடங்களிலும் வெடிகுண்டுப் புரளியைத் தடுக்க காலர் ஐடி தொலைபேசிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.38.86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு முறைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கானசுயஉதவிக் குழுக்கள் அமைப்பதிலும் மாவட்ட ஆட்சியர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.

இன்றைய கூட்டத்தை அடுத்து காவல் துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை காலைநடைபெறுகிறது. ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நாளை பிற்பகலிலும், நாளை மறுநாள் காலையிலும்நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+