தீர்த்தனுக்கு தலைமை தணிக்கை அதிகாரி கடிதம்
சென்னை:
தமிழக அரசின் நிதி நிலை குறித்த அறிக்கையை செய்தியாளர்களிடம் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக முழுவிளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக தணிக்கை அதிகாரி தீர்த்தனுக்கு மத்திய தலைமை தணிக்கைஅதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, தமிழக அரசின் 2003-04ம் ஆண்டு நிதிநிலை குறித்த கணக்கு விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தீர்த்தன். தமிழக அரசு மீது குற்றம் சாட்டும்விதமாக இருந்த அந்த பேட்டியால் முதல்வர் ஜெயலலிதா கடும் கோபமடைந்தார்.
தமிழக அரசின் விளக்கத்தை முழுப்பக்க விளம்பரமாக இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் அவர்வெளியிட்டார். அதோடு நில்லாமல், மத்திய தலைமை தணிக்கை அதிகாரிக்கும் கடும் ஆட்சேபம் தெரிவித்துகடிதம் எழுதினார். சட்டசபையில் இன்னும் வைக்கப்படாத 2003-04ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை விவரங்களைசெய்தியாளர்களிடம் வெளியிட்ட தீர்த்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
ஜெயலலிதாவின் கடிதத்தின் அடிப்படையில் தற்போது தீர்த்தனுக்கு, மத்திய தலைமை தணிக்கை அதிகாரி ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அதில் 2003-04ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை குறித்த விவரங்களைசெய்தியாளர்கள் பேட்டியில் வெளியிட்டது தொடர்பாக முழு அளவிலான விளக்கத்தை அனுப்புமாறுகூறப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் கிடைத்த பின்னர் ஜெயலலிதாவின் புகார்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும் என்றுஜெயலலிதாவுக்கும் மத்திய தணிக்கை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications