மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது என்று முதலவர்ஜெயலலிதா கூறினார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்றுகாலை காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.

மாநாட்டில் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று உலக அளவில் பேசப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த திட்டமிடுதல்,உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பு மூலம் நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

இதைக் கெடுக்க சில சக்திகள் முனையலாம். அண்மையில் சென்னை, கோவை, தஞ்சை உள்பட சில நகரங்களில்பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு புரளியை கிளப்பி சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க முயன்றன.

தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதில் நான் எப்போதும் அலட்சியம் காட்ட மாட்டேன்.

வீடியோ கான்பரன்ஸ் முறையில் 270 நீதிமன்றங்களுடன் 11 சிறைச்சாலைகள் ரூ. 8.61 கோடி செலவில்இணைக்கப்பட்டுள்ளன. கைதிகளை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தும் பணியில் ஏற்படும் அபாயம் இதன் மூலம்தவிர்க்கப்படுகிறது. இதனால் கைதிகள் தப்பிச் செல்லும் வாய்ப்பும் ஏற்படுவது இல்லை. மேலும் ஆண்டுக்கு ரூ.10.69 கோடி மிச்சமாகும்.

ஜாதி, மத நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதில் தமிழகம் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறது.

போலீஸ் காவலில் கைதிகள் மரணம் குறைந்திருப்பதை மனித உரிமை ஆணையம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

எல்லா துறைகளில் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அனைத்து பெண்கள் கமாண்டோ,பெண்கள் போலீஸ் பட்டாலியன் போன்றவை முதலில் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். இந்த ஆண்டு 40மகளிர் காவல் நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு முடிந்ததும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண் போலீஸ் பிரிவுதொடங்கப்படும்.

எனது அரசு பதவி ஏற்றது முதல் தமிழ்நாட்டில் குற்ற விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குற்றவாளிகளைகண்டு பிடிப்பதும், திருடு போன சொத்துக்களை மீட்பதும் அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலை போலீஸ் கண்காணிப்புடன் அவசர கால விபத்து சிகிச்சை மையம் இணைக்கப்பட்டதால் விபத்தில்சிக்கிய 9,395 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கள்ளச்சாராயம், திருட்டி விசிடி, போதைப் பொருட்களை ஒழிப்பதில் போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும்.காவல் துறையை நவீன மயமாக்க ரூ. 89.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடி போலீசார் தங்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்குவழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தியுள்ளேன் என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+