2 மாத குழந்தையின் வயிற்றில் கரு !!
மதுரை:
பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கருவை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துஅகற்றினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆனந்தன்.இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஜான்சன் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந் நிலையில் சாந்தி மீண்டும்கர்ப்பமானார்.
அவருக்கு கடந்த மே மாதம் 4-ம் தேதி காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தைபிறந்தது. அதற்கு நெல்சன் என்று பெயர் சூட்டினர். பிறந்தது முதல் குழந்தை அழுது கொண்டே இருந்தது.
இதனையடுத்து குழந்தையை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்குகுழந்தையின் வயிற்றுக்குள் கட்டி இருப்பதை அறிந்த டாக்டர்கள்சிகிச்சைக்கு மதுரைக்கு கொண்டு செல்லும்படிகூறினர்.
அதனையடுத்து நெல்சனை மதுரை அண்ணா நகரில் உள்ள கார்த்திக் குழந்தைகள் நல மருத்துவமனையிலசிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு எதஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது குழந்தையின் வயிற்றில்இன்னொரு குழந்தையின் கரு இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்தக் கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்து, 3 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் சுமார்2 மணி நேர அறுவை சிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை வெளியே எடுத்தனர்.
1 கிலோ எடை கொண்டதாக இருந்த அந்த கருவிற்கு ஒரு சிறிய குழந்தையின் முகம், கண், காது, கைகள், கால்கள்போன்ற உறுப்புகளுக்கான வடிவம் இருந்தது.
குழந்தையின் வயிற்றில் கரு இருந்த விநோதம் குறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குமார் வெங்கடேசன்கூறியதாவது:-
இரட்டை குழந்தைகள் பிறக்கின்ற வாய்ப்பு உருவாகும் போது, சிலருக்கு ஒரு குழந்தை இன்னொரு குழந்தையின்வயிற்றுக்குள் தங்கி விடும். 10 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இது போன்று கரு உருவாக வாய்ப்பிருக்கிறது.
தக்க நேரத்தில் இதைக் கவனித்து சிகிச்சை செய்யாவிட்டால், குழந்தைக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. மேலும்உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.
7 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் குழந்தைக்கும் இது போன்றுவயிற்றில் கருவளர்ந்து இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications