தினமலர் மீது தாக்குதல்: பாமக பிரமுகர் கைது
கடலூர்:
கடலூர் தினமலர் கிளை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கடலூர் தினமலர் நாளிதழ் கிளை அலுவலகத்தில் பாமகவினர் வன்முறையில்ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்கு (பாமகநிறுவனர் ராமதாஸுக்கு) எதிராக இனிமேல் செய்தி வெளியிட்டால் நடப்பதே வேறு என்று செய்தியாளர்களைமிரட்டி விட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த தாக்குதல்தொடர்பாக போலீஸார் பாமகவினர் 4 பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களில் பாமக மாநில துணைஒருங்கிணைப்புச் செயலாளர் பதவி வகித்து வந்த டி.ஆனந்தன் என்பவரை தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.
ஆனந்தன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் கடலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தினமலர் மீதானதாக்குதலுக்கும் ஆனந்தன்தான் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். எனவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications