ஒரே வீட்டில் 4 பேர் தீயில் கருகி சாவு
கரூர்:
கரூர் அருகே ஒரே வீட்டில் நான்கு பேர் தீயில் கருகி மாண்டனர்.
கரூர் மாவட்டம் பூங்கோடை காளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மோகன்ராஜ்..இவரது மனைவி பொன்னம்மாள் (30). இந்த தம்பதிக்கு காவியாஸ்ரீ (3), கவிப்பிரியா (6 மாதம்) என்ற இரண்டுபெண்குழந்தைகள்.
பொன்னம்மாள் மோகன் ராஜூவுக்கு 2-வது மனைவி ஆவார்.. மோகன் ராஜூவின் முதல் மனைவி பக்கத்துகிராமத்தில் வசித்து வருகிறார். மோகன்ராஜ் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொன்னம்மாளுடன் தங்குவார்.
இதேபோல் பொன்னமாளுக்கும் மோகன்ராஜ் 2-வது கணவர்தான். முதல் கணவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பிரிந்து வந்தவர் மோகன்ராஜூவுடன் வாழ்ந்து வந்தார்.
மோகன்ராஜூவின் வீடு ஊருக்கு வெளியே உள்ளது. அந்த வீட்டில் பொன்னம்மாளின் தந்தை முத்துச்சாமி, தாய்ராமாயி ஆகியோரும் வசித்து வந்தனர். முத்துச்சாமி ஒரு விவசாய தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்துவருகிறார்.
இந் நிலையில் நேற்றிரவு முத்துச்சாமியும் தோட்டத்துக்கு காவல் காக்க சென்று விட்டார். வீட்டில் பொன்னம்மாள்,அவரது 2 மகள்கள், தாய் ராமாயி ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
இன்று காலை முத்துச்சாமி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உள் பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.கொண்டியை கையை விட்டு நகர்த்தி அந்த கதவை முத்துசாமி திறந்து உள்ளே சென்றார். அவர் உட்பக்க அறையில்இருந்து முனகல் சத்தமும், புகையும் வெளியே வந்தது.
இதனால் பதற்றம் அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்தார். உள்ளே பொன்னம்மாள், அவரது2 மகள்கள், தாய் ராமாயி ஆகியோர் உடல் வெந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனே 4 பேரையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே ராமாயி மற்றும்கவிப்பிரியா ஆகியோர் இறந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயேபொன்னம்மாளும் அவரது மூத்த மகள் காவியஸ்ரீயும் இறந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர், வேலாயுதம்பாளையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மோகன்ராஜூவுக்கும் பொன்னம்மாளுக்கும் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் பொன்னம்மாள் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே அவர்தான் தனது தாயையும்- 2 மகள்களையும் எரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications