பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
டெல்லி:
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்கிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துவருவதை அடுத்து, உள்நாட்டிலும்அவற்றின் விலைகளை உயர்த்த பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோல் விலை ஏப்ரல், ஜூலையில் ரூ.2,131.45 ஆக இருந்தது. அது இந்தமாதம் 2,319.45 ஆக அதிகரித்துவிட்டது. பீப்பாய்க்கு ரூ.1,880 ஆக இருந்த டீசல் விலை இப்போது ரூ.2,209 ஆகஉயர்ந்துவிட்டது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுடன் ஒப்பிட்டால் உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின்விலைகளைக் கடுமையாக உயர்த்த வேண்டும்.
ஆனால், இறக்குமதி செய்யப்படும்போது ஆகும் அடக்க விலையின் 10 சதவீத அளவுக்கே விலையைஉயர்த்தலாம் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால்தான் லிட்டருக்கு ஒரு ரூபாய் மட்டும்அதிகரிக்கப்படுகிறது என்றார்.
இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் இரண்டாவது முறையாக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications