தமிழகம் அமைதிப்பூங்காவா? வாசன் கேள்வி
சென்னை:
கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடக்கும்போது, தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக முடியும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்புக்கு திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரவர் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிக அளவில் கொலை, கொள்ளைநடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும்போது தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாகமுடியும்?
நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அவர்கள் மீது போலீசார்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
வாசன் மாற்றப்பட மாட்டார்: சல்மான் குர்ஷித்
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.வாசனை மாற்றும் திட்டம் ஏதும் கட்சி மேலிடத்திடம் இல்லைஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான சல்மான் குர்ஷித் கூறினார்.
சென்னை வந்துள்ள சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் மத்திய அமைச்சாரகப்போகிறாரா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. மத்திய அமைச்சர் பதவியை தருவது பிரதமரின்உரிமை என்று என்னிடம் வாசன் கூறியுள்ளார்.
ஒருவேளை வாசன் விரும்பினால் அவருக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம். இருப்பினும்இப்போதைக்கு கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டம் கட்சி மேலிடத்தில் இல்லை.
கட்சியை தமிழகத்தில் அடிமட்ட அளவிலிருந்து வலுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications