விஜயகாந்துடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை:

உடுமலைப்பேட்டையில் நடிகர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் "நெறைஞ்ச மனசு படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சி மற்றும்உடுமலைப்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன், உடுமலைப்பேட்டையில் விஜயகாந்த் தங்கியிருந்த ஆனைமலைஸ்ஹோட்டலுக்கு வந்தார். அவரை விஜயகாந்த் வரவேற்றார். இருவரும் தனியறையில் சுமார் ஒன்றரை மணி நேரம்ஆலோசனை செய்தனர்.

C.P.Radha krishnanசந்திப்புக்குப் பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் வந்த உடுமலை பாஜக நிர்வாகிகள் விஜயகாந்துடன் இணைந்துநின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். சந்திப்பு குறித்து ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, இது மரியாதைநிமித்தமான சந்திப்பு என்று கூறினார். விஜயகாந்த் பதிலேதும் கூறவில்லை.

விஜயகாந்த் ரசிகர்களுக்கும் பாமகவினருக்கும் இடையேயான மோதல் குறித்தும், விஜயகாந்த் அரசியலுக்குவருவது குறித்தும் இருவரும் விவாதித்தாக இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+