குறுகிய காலத்தில் பல லட்சம்; பலே ஜெயலட்சுமி !
மதுரை:
தற்போது செய்தித்தாள் நாயகியாகியுள்ள ஜெயலட்சுமி குறுகிய காலத்தில் பல லட்சம் சொத்துக்களை வாங்கிக்குவித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகளை தனதுகவர்ச்சி வலையில் வீழ்த்தி, அவர்கள் மூலம் பல லட்சம் சொத்துக்களையும், பணத்தையும் சேர்த்ததாக பரபரப்புசெய்திகள் வெளியாகி வருகின்றன.
காவல்துறை அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஜெயலட்சுமி செய்த லீலைகள்,மோசடிகள் வெளியாகி வருவதால் காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் பீதி நிலவுகிறது.
தன்னை மாடலிங் பெண் என்றும், காவல்துறை அதிகாரி என்றும், அரசு அதிகாரி என்றும் கூறிக் கொண்டு அவர்பலரையும் ஏமாற்றி பணம் பறித்துள்ளார். தினசரி இரண்டு உடைகளை மாற்றும் ஜெயலட்சுமி, பணக்காரபெண்களிடம் அதிக பழக்கத்தை வைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் பல்வேறு காவல்துறை அதிகாகளையும் வளைத்துள்ளார். அவர்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ. 50லட்சம் வரை பணம் சேர்த்ததாக தெரிகிறது. இந்த பணம் அனைத்தையும், மதுரையில் உள்ள 10க்கும் மேற்பட்டவங்கிகளில் போட்டு வைத்துள்ளார் ஜெயலட்சுமி.
இதுதவிர ஏராளமான சொத்துக்களும் ஜெயலட்சுமிக்கு சொந்தமாக உள்ளதாம். கிறங்கடிக்கும் பேச்சால் பலகாவல்துறை அதிகாரிகளை காமப்பேய் பிடிக்க வைத்துள்ள ஜெயலட்சுமி, அவர்களில் சிலரை கல்யாணம் செய்துகொண்டும் உள்ளார்.
ஊருக்கு ஒரு பெயருடன் வலம் வந்த ஜெயலட்சுமி, கடந்த ஆண்டு நெல்லையில் விபச்சாரம் செய்ததாகபோலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரையே அட்ஜஸ்ட் செய்துவழக்கிலிருந்து தப்பினார் ஜெயலட்சுமி.
ஜகஜ்ஜால கில்லாடியாக விளங்கியுள்ள ஜெயலட்சுமி வரும் 16ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்வாக்குமூலம் அளிக்கவுள்ளார். அப்போது அவரைப் பற்றிய பல்வேறு ரகசியங்கள், பரபரப்பு தகவல்கள்வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications