மத்திய அரசின் முன் சேது சமுத்திர திட்டம்: டி.ஆர்.பாலு
டெல்லி:
சேதுசமுத்திர திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்னும் ஒரிரு நாட்களில் மத்திய அரசின்ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலுதெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது.
சேது சமுத்திர திட்டம் சாத்தியமானது தான் என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் கடந்த 20ம்தேதி அறிக்கை அளித்துள்ளது. ரூ 2,000 கோடி செலவில் நான்கு ஆண்டுகளில் இந்த திட்டத்தை விரைந்து முடிக்கசேதுசமுத்திர கழகம் என்னும் அமைப்பு உருவாக்கப்படும்.
இன்னும் ஒரிரு நாட்களில் இந்த திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பான பொது விவாதத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தின்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல் பகுதியை ஆழப்படுத்தும்போது,எடுக்கப்படும் மணல் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் கொட்டப்படும்.
இதனால் 40 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் கடல் புகுந்த நிலங்களை திரும்ப பெறலாம். இதனால் 2,500ஏக்கர் பரப்பளவு நிலம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும், துறைமுக கழகங்களும்ஆர்வமாக இருக்கின்றன. இதனால் இந்த திட்டம் நிறைவேறுவதில் பணசிக்கலும் ஏற்படாது என்று கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications