துப்பியதை தூக்கி..: ஜெவுக்கு கருணாநிதி பதிலடி
சென்னை:
அதிமுக அரசு தொடர்ந்து கொள்ளை அடிப்பதற்காக நான் ஓய்வு பெற வேண்டுமா என்று திமுக தலைவர்கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நிதியமைச்சர் பொன்னையன் காரமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஆனால் அதில் சாரமில்லை. ஒருஅதிகாரிக்கு (அக்கெளன்டண்ட் ஜெனரல்) பதில் சொல்வதற்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில்செலவழித்து பத்திரிக்கைகளில் விளக்கம் தர வேண்டுமா என்று ஜெயலலிதாவை நான் கேட்டதற்கு நிதியமைச்சர்பதில் அளிக்கவில்லை.
ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டுமென்று கூறியிருக்கிறார் நிதியமைச்சர் பொன்னையன்.நான் ஓய்வு பெற்றுவிட்டால் தமிழ்நாட்டை இப்படியே தொடர்ந்து கொள்ளை அடிக்கலாம் என்பதற்காக அவ்வாறுகூறியிருக்கிறார்.
தமிழகத்தின் நிதிநிலையை திமுக சீரழித்துவிட்டதாக பொன்னையன் கூறுகிறார். நாங்கள் கொண்டு வந்த நல்லதிட்டங்களை எல்லாம் இவர்கள் நீக்கினார்கள். அதற்குப் பிறகு நிதிநிலைமை சரியானதா? இவர்கள் துப்பியதைமக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இவர்களே தூக்கி வாயில் போட்டுக்கொள்கிறார்களே, அது ஏன்?
தமிழகத்திலும் புதுவையிலும் சேர்ந்து 40 இடங்களிலும் வெற்றி பெற்ற நான் ஓய்வு பெற வேண்டுமாம். 40இடங்களிலும் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, தன்னுடைய சொந்த தொகுதிக்குள்ளேயே நுழைய முடியாதபொன்னையன் ஆகியோர் ஓய்வு பெறாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்ற வேண்டுமாம்.
பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ சந்திப்பது தன்னுடைய மரியாதைக்கு உகந்தது அல்ல என்று மாநிலமுதல்வர் நினைக்கும்போது. மத்தியிலே அமைச்சர்களால் ஒரு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திடஇயலாது.
இதற்குப் பின்னும் நண்பர் பொன்னையன், கருணாநிதி ஓய்வு பெறவேண்டும் என்று ஜெயலலிதாவைமகிழ்விப்பதற்காக கூறுவார் எனில் அவருக்கு நான் அளிக்கும் பதில் இதுதான்.
பெரியாரும், அண்ணாவும் திராவிட இயக்கத்தை காக்க இட்டுள்ள கட்டளைகள் இன்னும் என்னாலும், என்நண்பர்களாலும் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. அதற்கு முன் ஓய்வு என்றால் அது பொன்னையன்போன்ற பிற்போக்கு சக்திகளால் அளிக்கப்படும் நிரந்தர ஓய்வாகத்தான் இருக்க முடியும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications