ஜெயலட்சுமி விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்
திண்டுக்கல்:
![]() |
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகள்முறைகேடான தொடர்பு வைத்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி காவல்துறைக்கு பெரும் தலைக்குனிவைஏற்படுத்தியுள்ளது.
ஜெயலட்சுமி இதுவரை 19 பேரை கல்யாணம் செய்துள்ளதாகவும், இதில் பலர் காவல்துறை அதிகாரிகள் எனவும், இவர்களைத்தவிர மேலும் பல போலீஸ் அதிகாரிகளை அவர் தனது சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்ததாகவும் வெளியாகும்செய்திகளால் காவல்துறையே நாறிப் போய்க் கிடக்கிறது.
இந் நிலையில் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ஷாஜகானுக்கும் ஜெயலட்சுமிக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது.
ஜெயலட்சுமியும், ஷாஜகானின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அவர்களை குற்றாலத்திற்கும் கூட்டிப் போயுள்ளார்.அப்படியே ஷாஜகானுடன் உடல்ரீதியிலான உறவும் வைத்துள்ளார்.
ஜெயலட்சுமிக்கு பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததால் அதைப் பயன்படுத்தி தனக்கு மதுவிலக்குப்பிரிவுக்கு மாறுதல் வாங்கித் தருமாறு கூறி ரூ. 1லட்சம் பணத்தையும் ஷாஜகான் கொடுத்திருந்தார்.
ஆனால் ஜெயலட்சுமி, ஷாஜகானுக்கு அல்வா கொடுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ஜெயலட்சுமி விவகாரம் வெளிக் கிளம்பியுள்ள நிலையில், ஷாஜகான் சேலம் மாவட்டத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
