அமைச்சரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பொன்னமராவதி:
பொது மக்களிடம் குறை கேட்க வந்த மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் காரை கிராம மக்கள் சூழந்து கொண்டுமுற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ராதாகிருஷ்ணன் பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் குறை கேட்க அதிகாரிகளுடன்வந்தார். அமைச்சர் வரும் கிராமங்கள் குறித்து அப் பகுதிகளில் நோட்டீசும் வினியோகிக்கப்பட்டிருந்தது.
இதில் வேந்தன்பட்டி என்ற கிராமத்தின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் வேந்தன்பட்டி கிராம மக்கள் கோபமடைந்தனர். வேந்தன்பட்டிகிராம எல்லையில் திரண்ட பொது மக்கள் அந்தப் பக்கமாக வேறு ஊருக்குச் செல்ல வந்த அமைச்சரின் காரை வழி மறித்தனர்.
காரைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை அதிமுகவினர் தட்டிக் கேட்கவே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இதனால் அங்கு பதற்றமும் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு கிராம மக்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே அமைச்சரின் கார்செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications