ஏதென்ஸ் ஒலிம்பிக்: குஞ்சராணி தேவி தோல்வி

Subscribe to Oneindia Tamil

ஒலிம்பிக்:

ஏதென்ஸ் ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர்.

துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி பகவத், சுமா ஷிரூர் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட குஞ்சராணி தேவி, 5-வது இடத்தையேபிடித்தார். அவர் மொத்தம் 190 கிலோ தூக்கினார். 210 கிலோ தூக்கிய துருக்கி வீராங்கனை ஹிர்சன் தய்லின்தங்கப்பதக்கத்தையும், 205 கிலோ தூக்கிய சீன வீராங்கனை லீ வெள்ளிப்பதக்கத்தையும், தாய்லாந்தைச் சேர்ந்தஆரி 200 கிலோ தூக்கி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.

லைட் ஹெவி வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜிதேந்தர்குமார் முதல் சுற்றி லேயே படுதோல்விஅடைந்தார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அண்ட்ரியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் ஜிதேந்தர்குமார்தடுமாறினார். அண்ட்ரி விட்ட சராமரி குத்துக்களால் ஜிதேந்தர்குமாருக்கு ரத்தம் கொட்டியது. இதனால் 2-வதுரவுண்டிலேயே போட்டி நிறுத்தப்பட்டு உக்ரைன் வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பேட்மின்டனில் இந்திய வீராங்கனை அபர்ணா பொப்பட்டும், டேபிள் டென்னிஸில் சென்னையை சேர்ந்த சரத்கமலும் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஜுடோ மற்றும் துடுப்பு படகு போட்டியிலும் இந்திய வீரர்கள்படுதோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.

ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று ஹாலந்தை எதிர்த்து விளையாடுகிறது. அதேபோல் பாட்மிண்டன்,ஆடவர் லைட் வெல்டர் வெயிட் (64 கிலோ) பிரிவு குத்துச்சண்டை, மகளிர் 53 கிலோ பளுதூக்குதல், டேபிள்டென்னிஸ் ஆடவர் 2-வது சுற்று, துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் டிராப் பிரிவு, வில்வித்தை மகளிர் தனிநபர்போட்டிகளில் இந்திய வீரர்கள் இன்று பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+