"நியூ" சூர்யா மீது போலீஸில் வழக்கு!
சென்னை:
தணிக்கை வாரிய அதிகாரி மீது செல்போனை வீசி ரகளை செய்ததாக நியூ பட இயக்குநர்-நடிகர் சூர்யா மீதுசென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நியூ படத்தை எடுத்து இயக்கி, நடித்து வெளியிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா அந்தப் படத்தில் கிரணின் நடனம் ஒன்றைசமீபத்தில் சேர்த்தார். இந்தப் பாடலுக்கு அனுமதி வாங்குவதற்காக அதை சென்னையில் உள்ள தனிக்கைவாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் பாடலுக்கு அனுமதி வழங்க சென்னை தணிக்கை வாரியம் மறுத்து விட்டது. இதையடுத்து மும்பையில்உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு தனது பாடலை கொண்டு சென்ற சூர்யாவுக்கு பாடலில் சில வெட்டுக்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்கள் செய்த பின்பு பாடலை மீண்டும் சென்னை வாரியத்தில் கொடுத்தபோது மேலும் சில வரிகளை நீக்கக்கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டதாகவும், செல்போனை தூக்கி அதிகாரிகள் மீது வீசி ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதன் பேரில் சூர்யா மீது போலீஸார்,செல்போனை வீசி ரகளை செய்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தரக்குறைவாக பேசுதல்ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து சூர்யா கருத்து தெரிவிக்கையில், நான் ரகளை எதையும் செய்யவில்லை. அவர்களிடம்வாதாட மட்டுமே செய்தேன். மிகுந்த சிரமப்பட்டு அந்தப் பாடலை நான் எடுத்துள்ளேன். ரூ. 25 லட்சம் செலவுசெய்துள்ளேன்.
போலீஸாரிடம் உண்மைகளைச் சொல்லியுள்ளேன். அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர். எனக்கு அந்தப்பாடலுக்கு அனுமதி வேண்டும். இதற்காக தணிக்கை வாரிய மேசை, நாற்காலிகளை துடைக்கச் சொன்னாலும்துடைக்கிறேன் என்றார் சூர்யா.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications