என்னை யாரும் கடத்தவில்லை: பெண் கவுன்சிலர்
சென்னை:
அதிமுகவில்தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், யாரும் என்னைக் கடத்தவில்லை என்றும் சென்னை பெண் கவுன்சிலர்தேவநாயகி தெரிவித்து உள்ளார்.
சென்னை 19-வது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் தெய்வநாயகி (40). இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால்அவரையும் மகள் தமிழ்செல்வியையும் அதிமுகவினர் கடத்திவிட்டதாக அவரது கணவர் புகார் கூறியிருந்தார்.
இந் நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் புடைசூழ தெய்வநாயகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்குச் செல்ல நான், எனது கணவர் ராஜன், மகள்தமிழ்செல்வியுடன் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் வந்த காங்கிரஸ்கவுன்சிலர் ராயபுரம் மனோ எங்களை அழைத்தார்.
நாங்களும் ஏறினோம். கார் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றது. அங்கு மரியாதை நிமித்தமாக தமிழககாங்கிரஸ் தலைவர் வாசனுக்கு சால்வை அணிவித்தேன். இதை நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாகபொய்யான செய்தியை பரப்பிவிட்டனர்.
இப்போது என் கணவரை பலமணி நேரமாகக் காணவில்லை. அவரை காங்கிரஸ் கவுன்சிலர் ராயபுரம் மனோகடத்தி இருக்கலாம் என்றும் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் வண்ணாரப்பேட்டை போலீசில்புகார் தெரிவித்து உள்ளேன்.
வீட்டில் தனியாக இருக்க பயந்து கொண்டு எனது தங்கையின் வீட்டில் தான் இரவு தங்கி இருந்தேன். என்னையாரும் கடத்தவில்லை. நான் கட்சி மாறுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறினார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவரும் அதிமுக கவுன்சிலருமான வெற்றிவேல்கூறியதாவது:-
தெய்வநாயகியை அதிமுகவினர் கடத்தி சென்றுள்ளனர் என்று வாசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.தெய்வநாயகி சுதந்திரமாகத்தான் இருக்கிறார். அவருடைய கணவரைத்தான் காங்கிரசார் கடத்தி சென்று போதைமயக்கத்திலேயே வைத்துள்ளனர் என்று கூறினார்.
சென்னையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கடத்தல்
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications