தடுப்பூசி போட்ட குழந்தைகள் மயக்கம்
சேலம்:
சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் மஞ்சள் காமலை தடுப்பூசி போடப்பட்ட பலகுழந்தைகள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கீகாரம் இல்லாமல் தடுப்பூசி முகாம் நடத்திய 7பேரை போலீஸார் கைது செய்தனர்.
காலம் கடந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சிவதாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் மஞ்சள் காமலை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்தமுகாமை வெங்கடேசன், ரகுமான், பக்ருதீன், அஜய் செளராசியா, சந்திரசேகரன், ரசிதரன் மற்றும் ஒரு பெண்ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தடுப்பூசி போட்டனர். ஆனால், தடுப்பூசிபோட்டுக் கொண்ட பச்சிளம் குழந்தைகள் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தன. சில குழந்தைகளுக்கு வாந்தியும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.
இதனால் பயந்து போன பெற்றோர்கள், முகாம் நடத்தியவர்களை முற்றுகையிட்டபோது, பயப்படத் தேவையில்லை,சிறிது நேரத்தில் குழந்தைகள் குணமடைந்துவிடுவர் என முகாமைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் நேரம் செல்லச் செல்ல குழந்தைகளின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் கைது செய்தனர். குழந்தைகளை உடனடியாக அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
முறையான அனுமதி வாங்காமல் இந்த முகாம் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும்,ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 50 வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எக்ஸ்பயரி தேதி முடிந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications