வழக்கறிஞர்கள் சவாலை சந்திப்பேன்: சுபாஷன் ரெட்டி
சென்னை:
உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ரெளடித்தனம் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
ஜூலை 30ம் தேதி பிறப்பிக்கப்பட்ட, வழக்கறிஞர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புக்கு தடை கோரிதொடரப்பட்டுள்ள பொது நல மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர்அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறுகையில், சட்டத்தை நிலை நாட்ட நீதிமன்றம் உறுதி பூண்டுள்ளது.அது கோர்ட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் சரிவர கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம்விரும்புகிறது.
வழக்கறிஞர்களுக்காக சட்டம் வளைந்து கொடுக்காது. சட்டத்திற்கு முன் வழக்கறிஞர்கள்தான் வளைந்து போகவேண்டும்.
உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ரெளடித்தனத்தையோ, கலகத்தையோ, அடிதடியையோ நான் அனுமதிக்கமாட்டேன். எந்தவித சமரசத்திற்கும் ஒத்துவராமல் மிகவும் பிடிவாதமாகவும், சவாலாகவும் வழக்கறிஞர்கள்போராடுகிறார்கள். அந்த சவாலை நானும் சந்திப்பேன்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக வழக்கறிஞர்கள் இல்லை, நீதிபதிகளுக்கும்இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் சுபாஷன் ரெட்டி.
நீதிபதி அசோக் கூறுகையில், எதற்காக இப்படிப் போராடுகிறீர்கள்? எதை சாதிக்கப் போகிறீர்கள்? எதற்கும் ஒருஅளவு உள்ளது. இதை வழக்கறிஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையே, தடையை மீறி வழக்கறிஞர் கருப்பன் தலைமையில் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம்நடத்திய வழக்கறிஞர்களுக்கு, நீங்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேட்டுநோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ரெட்டியை மாற்ற முடியாது: சட்ட அமைச்சர்
இதற்கிடையே, வழக்கறிஞர்கள் விரும்புவது போல், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை எளிதில் மாற்றிவிட முடியாது என்றுமத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
பரத்வாஜ் கூறுகையில், வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் நினைப்பது போல,ஒரு தலைமை நீதிபதியை எந்த நடைமுறைகளும், காரணமும் இன்றி எளிதில் மாற்றிவிட முடியாது என்றார்.
இப் பிரச்சினை தொடர்பாக, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்க தமிழக வழக்கறிஞர்கள் முடிவு செய்திருப்பது குறித்துக்கேட்டபோது, ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் சந்திக்க உரிமை உள்ளது என்றார் பரத்வாஜ்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications