ஆடம்பரமாய் வாழவே...: ஜெயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஇதற்கிடையே சிவகாசி போலீசார் ஜெயலட்சுமியிடம் தாங்கள் நடத்திய விசாரணையின்விவரங்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

போலீசாரிடம் ஜெயலட்சுமி அளித்துள்ள அந்த வாக்குமூல விவரம்:

நான் சிவகாசி காக்கிவாடான் பட்டியைச் சேர்ந்த அழகிரிசாமியின் மகள். 1973ம் ஆண்டுபிறந்தேன். 1992ல் தேனியைச் சேர்ந்த மில் தொழிலாளி கேசவனுடன் எனக்கு திருமணம் நடந்தது.அபிநயா, கோகுல் என இரு குழந்தைகள் உள்ளனர்.

1997ம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டேன். குழந்தைகளைபெற்றோரிடம் விட்டுவிட்டு மதுரை எல்லீஸ் நகரில் டெய்லரிங் கடை நடத்தி வந்தேன்.

அப்போது கடைக்கு நிறைய போலீஸ் அதிகாரிகள் வருவார்கள். அவர்களுடன்

நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். அந்த அதிகாரிகளின் பெயரைச் சொல்லி நிறைய பேரிடம் பணம்வசூலிக்க ஆரம்பித்தேன். இதன்மூலம் ஆடம்பரமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

Jayalakshmiதொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மூலமாக தொழிலதிபர்களின் நட்பும் கிடைத்தது. அவர்களுடன்நெருக்கமான உறவு வைத்துக் கொண்டேன். இதனால் நிறைய பணம் கிடைத்தது.

ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக வாழ ஆரம்பித்தேன். இந் நிலையில்கோவையைச் சேர்ந்த முருகவேலும், கண்ணனும் அவர்களிடம் நான் வாங்கிய நகைகளுக்கானபணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தனர்.

அவர்களிடம் இருந்து தலைமறைவாகி வேலூரில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன்.அப்போது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார் ஜெயலட்சுமி.

கோவையில் நகைக் கடை நடத்தி வரும் முருகவேல், மதுரை திடீர் நகர் காவல் நிலையஇன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோவனின் மைத்துனர். ஜெயலட்சுமியின் முந்தானையில் சிக்கியஇளங்கோவன் அவரை முருகவேலிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அப்போது தனக்கு மூத்த போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என்று சொல்லி, முருகவேலின்மகளுக்கு போலீஸ் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அவரிடம் நகைகளையும்பணத்தையும் வாங்கியுள்ளார்.

ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த இளங்கோவன், அவரதுமனைவி, முருகவேல் ஆகியோர் ஜெயலட்சுமியை கடத்திச் சென்று அடித்து, உதைத்துள்ளனர்.

அத்தோடு ஜெயலட்சுமியின் தாய், தம்பியையும் கடத்திச் சென்று அடித்துள்ளனர். இவர்கள் கடத்திச்செல்லப்பட்டது குறித்து ஜெயலட்சுமியின் தந்தை நீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பவே, விவகாரம்பெரிதாவதை உணர்ந்து அனைவரையும் விடுவித்துள்ளனர்.

இதன் பின்னரே ஜெயலட்சுமி வேலூரில் சென்று ஹோட்டலில் பதுங்கியிருக்கிறார்.

பல போலீஸ் அதிகாரிகளுடன் நட்பு பாராட்டி பணம் சுருட்டிய ஜெயலட்சுமி கடைசியில் பணவிவகாரத்தாலேயே வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கிறார்.

மதுரையில் மட்டும் 8 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களை கையில் போட்டுக் கொண்ட ஜெயலட்சுமி,மொத்தம் 20 பேருக்கு கழுத்தையும் நீட்டியிருக்கிறார்.

பணத்தோடு பல ஆண்களையும் ருசி காண ஆரம்பித்த ஜெயலட்சுமி, 1994ம் ஆண்டிலேயே கர்ப்பப்பையையும் அகற்றிவிட்டதாக சொல்கிறார்கள்.

யார் இந்த ஜெயலட்சுமி?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+