For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யார் இந்த ஜெயலட்சுமி?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தூத்துக்குடி அருகே கோவில்பட்டியை அடுத்த அழகாபுரத்தைச் சேர்ந்த அழகிரிசாமி என்பவரின் மகள் தான்ஜெயலட்சுமி(வயது 35). இவருக்கும் தேனியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்திருமணம் முடிந்துள்ளது.

7ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், பார்க்க மிக அழகாக இருந்த ஜெயலட்சுமிக்குத் தேவையான வசதிகளைசெய்து தர மில் தொழிலாளியான கேசவனால் முடியவில்லை.

கோவையில் ஒன்றிப்புதூரில் தங்கியிருந்தபோது அபிநயா என்ற குழந்தை பிறந்துள்ளது. இந் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருடன் ஜெயலட்சுமிக்கு தகாத உறவு ஏற்பட்டது.

அவர் மூலமாக பணம், வசதி கிடைக்க அதுமுதல் ருசி கண்ட பூனையானார் ஜெயலட்சுமி. இரண்டாவதாக கோகுல்என்ற மகனும் பிறந்தான். இருந்தாலும் ஜெயலட்சுமியின் நடத்தையில் மாற்றம் இல்லை. வழக்கறிஞர் தவிர்த்தும்மேலும் பல ஆண்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

இந்த விவரம் தெரியவர மகளை திருத்த முயன்றிருக்கிறார் தந்தை அழகிரிசாமி. ஆனால், அவர் அடங்கமறுக்கவே, ஜெயலட்சுமியை தலைமுழுகிவிட்டு ஒதுங்கிவிட்டது அவரது குடும்பம்.

Jayalakshmi in police dressஜெயலட்சுமியின் நடத்தையால் வெறுத்துப் போன கணவர் கேசவன் 1995ம் ஆண்டில் பிரிந்துவிட்டார். அது முதல்ஜெயலட்சுமிக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட, தான் விரும்பிய ஆண்களுடன் எல்லாம் ஜமாய்த்திருக்கிறார்.

அந்த ஆண்களில் ஹோட்டல் தொழிலாளியான சுரேஷ் என்பவரை கணவர் என்று சொல்லி ஒரு வீடு பிடித்துத்தங்கியிருந்த ஜெயலட்சுமி, பின்னர் அவரும் பிரிந்துவிடவே திருநெல்வேலிக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.

விபச்சாரத்தையே மிக டீசண்டாக செய்து வந்த ஜெயலட்சுமிக்கு கையில் பணமும் நன்றாகப் புரண்டது. ஆனாலும்வெளியுலகுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்வதைப் போல காட்டிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெயலட்சுமி, ஆம்வேமல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தான் மார்க்கெட்டிங் விஷயமாக காவல் துறை அதிகாரிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

சபல ஆசாமிகளை பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிடும் திறமையை நன்றாகக் கற்றிருந்த ஜெயலட்சுமி, பலஅதிகாரிகளை தனது உடை, பேச்சால் மடக்கிப் போட்டுள்ளார். அந்த அதிகாரிகளிடம் நன்றாக பணத்தையும்சுருட்டி மாருதி எஸ்டீம் கார், வீடுகள் என சொத்துக்களைக் குவித்துள்ளார்.

ஆயுதப் படை அதிகாரி ஒருவர் இவரிடமே கதியாய் விழுந்து கிடந்திருக்கிறார். அவரது மனைவி இது குறித்துடி.எஸ்.பியிடம் புகார் தர, அதற்காக ஜெயலட்சுமியை அழைத்து விசாரித்த டி.எஸ்.பியும் ஜெயலட்சுமிக்குஅடிமையானார்.

இதனால் அந்த டிஎஸ்பியின் மனைவி தென் மண்டல ஐஜியிடம் புகார் தர, அவரைத் தூக்கி திண்டுக்கல்லுக்குமாற்றியடித்துள்ளார் ஐஜி. ஆனாலும், டி.எஸ்.பிக்கும் ஜெயலட்சுமிக்கும் தொடர்பு விடுபடவில்லை.

Jayalakshmiதிண்டுக்கல்லுக்கே வந்து செல்ல ஆரம்பித்த ஜெயலட்சுமி அங்கு தன்னை பெண் போலீஸ் அதிகாரி என்றுசொல்லிக் கொண்டு பலரிடமும் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக பணம் சுருட்டியிருக்கிறார். இதற்காகபோலீஸ் உடையிலும் வலம் வந்திருக்கிறார்.

அடுத்து ஜெயலட்சுமி வந்த இடம் மதுரை. அங்கு 4,000 வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்கியபடி அங்குள்ளபோலீசாருக்கு வலை வீச, திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் இவருக்குஅடிமையாகியிருக்கிறார்.

தனக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் பழக்கம் உண்டு என ஜெயலட்சுமி சொன்னதை நம்பிய அந்த இன்ஸ்பெக்டர்தனது அக்காள் மகளுக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்க, அதற்கு கொஞ்சம் செலவாகுமே என்று சொல்லி சிலலட்சங்களை வாங்கியிருக்கிறார் ஜெயலட்சுமி.

ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தராததால் இன்ஸ்பெக்டரின் அக்காள் ஜெயலட்சுமியை மிரட்ட,பிரச்சனையாகியுள்ளது. இதையடுத்து அவரைக் கடத்திச் சென்று பூட்டி வைத்து மிரட்டியிருக்கிறதுஇன்ஸ்பெக்டரின் குடும்பம்.

தன்னிடம் பணம் இல்லை என ஜெயலட்சுமி கூறிவிடவே, தனது ஆட்களை கோவில்பட்டிக்கு அனுப்பியஇன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியின் தாயார் மற்றும் தம்பியைக் கடத்தி வந்து அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி நீதிமன்றம் செல்ல, கோர்ட் உத்தரவுப்படி ஜெயலட்சுமியைக்கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியது போலீஸ்.

அப்போது தான் ஜெயலட்சுமியை ஒரு இன்ஸ்பெக்டரே கடத்தி வைத்திருப்பதும், அவரது முந்தானையில் பலபோலீஸ் அதிகாரிகள் சிக்கிக் கிடப்பதும் தெரிய வந்திருக்கிறது.

Jayalakshmi with policeவிபச்சாரமாக செய்யாமல் விரும்பிய ஆண்களுடன் எல்லாம் குஜால் வாழ்க்கை நடத்தியுள்ள ஜெயலட்சுமி,இதுவரை மொத்தம் 20 பேரிடம் தாலி கட்டிக் கொண்டிருக்கிறார். இதில் பெரும்பாலானவர்கள் டி.எஸ்.பி,இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மட்டத்தில் இருப்பவர்கள்.

சபல விஷயத்தில் காக்கிச் சட்டைகளை எளிதில் மடக்கிப் போட்டிருக்கிறார் ஜெயலட்சுமி.

இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சொக்கிகுளம் மகளிர் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி,நீதிமன்றத்தில் வாயைத் திறக்கும்போது காவல் துறை மேலும் நாறப் போவது மட்டும் நிச்சயம்.

காவல்துறை மட்டுமல்லாமல் எம்.பி., எம்.எல்.ஏக்களும் இவரது சபல லிஸ்டில் அடக்கம் என்கின்றது போலீஸ்வட்டாரம். ஜெயலட்சுமியிடம் கைப்பற்றப்பட்ட டைரியே இதற்கு சாட்சியாம்.

ஒரு முறை ஜெயலட்சுமியிடம் பணம் இழந்த டி.எஸ்.பி. ஒருவர் அவரை விபச்சார வழக்கில் உள்ளே தள்ள,நெல்லையைச் சேர்ந்த சில ஆளும் கட்சிப் பிரமுகர்கள் ஓடி வந்து ஜாமீனில் எடுத்துச் சென்றார்களாம்.

நெல்லையில் சுற்றுலா மாளிகையில் ஒரு அமைச்சர் தங்கியிருந்த இரு நாட்களும் ஜெயலட்சுமியும் அங்கேயேஇருந்தார் என்ற புதுக் குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X