பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக பெங்களூரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதி இந்த சீசனின் முதலாவது முறையான மழைக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

காற்று இன்னும் முழுமையாக மேற்கு திசைக் காற்றாக மாறவில்லை. இதன் காரணமாக, உட்புற மாவட்டங்களில் உருவாகும் இடி மழையானது தற்போது சென்னை நோக்கி வராமல், அப்படியே பெங்களூரு பக்கமாக திசைமாறி நகர்ந்து செல்கிறது.
ஒருமுறை இந்த மேற்கு திசைக் காற்று வலுவடைந்து சீராக நிலைபெற்றுவிட்டால், சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மாலை நேர இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். அதுவரை, மழை மேகங்களை ரசிக்கும் வானிலை ஆர்வலர்களுக்கு உட்புற மாவட்டங்கள் மட்டுமே 'ஜாக்பாட்' பகுதியாக நீடிக்கும்" என்று கூறியிருக்கிறார்.
அதாவது, தற்போது சென்னை முதல் வேலூர் வரையிலான வட தமிழகப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து, வெப்பம் தகித்து வருகிறது. கடலோரப் பகுதிகள் வெயிலில் வாடினாலும், தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய தீவிரமான கோடை மழை பெய்யப் போகிறது.
தற்போதைய சூழலில், மழை மேகங்களை ரசிக்கும் வானிலை ஆர்வலர்களுக்கு இந்த உட்புற மாவட்டங்கள் தான் மிகச்சிறந்த ஜாக்பாட் பகுதியாக விளங்கப் போகின்றன. இன்னும் சில நாட்களில் மேற்கு திசைக் காற்று வலுவடைந்து, சீராக வீசத் தொடங்கும் போது, உட்புற மாவட்டங்களில் உருவாகும் மழை மேகங்கள் அனைத்தும் நேராகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை நோக்கித் தள்ளப்படும்.
அது நடக்கும் போது, சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மாலை நேர இடியுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்று வெதர்மேன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications