கரூரில் விஜய் பேச்சு அரசுப் பள்ளியில் நேரலை ஒளிபரப்பு? வைரல் வீடியோவால் கல்வி ஆர்வலர்கள் கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நேற்றைய தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பேசிய பேச்சுகள் ஏதோ ஒரு அரசு பள்ளியில் இருந்த தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கல்வி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கரூர் வெண்ணெய்மலை பகுதியில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானததற்கு பிறகு முதல் முறையாக விஜய் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வந்திருந்தார்.

joseph Vijay karur

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த அவர், சாலை மார்க்கமாக கரூர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய விஜய்யை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் விஜய் பேசினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது எப்படி என்பதை விளக்கினார். மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை தேடி வந்த நிலையில் அவரை விஜய் கிண்டல் செய்து பேசினார்.

இவ்வாறு விஜய் பேசிய பேச்சுக்களை தவெக தொண்டர்களும் ரசிகர்களும் டிவிகளிலும் நேரிலும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில் எங்கோ ஒரு அரசு பள்ளியில் விஜய்யின் பேச்சு நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் அமைச்சர் ராஜ்மோகன், கரூர் நிகழ்ச்சிக்கு ஆங்கராக மாறியதை போல் அந்த நிகழ்ச்சி அரசு பள்ளியில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்களும் கல்வி ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பள்ளிகளுக்குள் நுழையும் தவெக நிர்வாகிகள் (மக்கள் பிரதிநிதியில்லாதவர்கள்) விஜய் படத்தை காட்டி வகுப்பு மாணவர்களிடம் இவர் யார், இவரை பிடிக்குமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி அதை ரீல்ஸ்ஸாக போட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது விஜய் பேச்சு பள்ளியில் நேரலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில் இருப்பது எந்த பள்ளி என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+