மெட்டாவில் 9 கோடி சம்பளத்தில் வேலை.. நிராகரித்த இந்தியாவின் ஐஐடி பட்டதாரி.. செய்த தரமான சம்பவம்
மும்பை: காலம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாற்றங்களை சந்திக்கும். அதுவும் ஐடி துறையை பொறுத்தவரை ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை பெரிய மாற்றம் நடக்கிறது. கம்ப்யூட்டரில் வேலை என்று முதலில் வந்தார்கள். அடுத்தாக சாப்ட்வேரில் வேலை என்று வந்தது. அடுத்ததாக ஸ்மார்ட்போன்கள் வந்த பின்னர் சாப்ட்வேர் கண்டுபிடிப்பதே வேலையாக மாறியது. அடுத்ததாக இப்போது ஏஐ தெரிந்தால் தான் வேலையாக வந்துள்ளது. புதிது புதிதாக ஏஐ மாடல்கள் கண்டுபிடிப்பவர்களுக்கே டிமாண்ட் என்பதாக மாறி உள்ளது. அப்படி ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த இந்தியாவின் ஐஐடி பட்டதாரிககு 9 கோடி சம்பளத்துடன் மெட்டா நிறுவனம் வேலை வழங்கி உளள்து. ஆனால் அவர் மெட்டா (பேஸ்புக்), சொந்தமாக ஏ.ஐ. நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.
உங்களுக்கு இன்று செயற்கை நுண்ணறிவு துறையில் திறமை இருந்தால் சிவப்பு கம்பள வரவேற்பு உறுதி. அப்படியான நிபுணர்களுக்கான தேவை உலகளவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை மிச்சப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், ஏஐ மாடல்களை வேலைகளுக்கு விரும்பி வாங்குகின்றன. தெளிவாக சொல்வது என்றாலும், தினமும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகளை ஏஐவை வைத்து ஆட்டோமேஷன் செய்கிறார்கள். இதன் மூலம் பலருக்கு வேலை கொடுத்து சம்பளம் கொடுக்க தேவையில்லை. இது நிறுவனங்களுக்கு கோடிகளில் சேமிப்பும்,மிகப்பெரிய லாபமும் கிடைக்கும். அதேபோல் ஏஐயை பயன்படுத்தி வேலை செய்வதன் மூலம் சுமார் 40 சதவீதம் அளவிற்கு உற்பத்தி அதிகரிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால் கடினமான வேலை கூட வேகமாகவும், தரமாகவும் முடிக்கப்படுகிறது.இதுவும் தொழில் அதிபர்களை ஏஐ நோக்கி ஓட வைத்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது ஏஐ தொழிநுட்பம் தெரிந்திருந்தால் தான் வேலை என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்ட்டாயமாக்கி வருகின்றன. இதனால் இரண்டு ஆண்டுகளில் 10 லட்சத்தில் இருந்து 70 லட்சமாக அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேநேரம் வெறும் கோடிங், டேட்டா என்ட்ரி போன்ற வேலைகளில் இருந்தவர்களை நிறுவனங்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகின்றன. எனினும் ஏஐ மெசின் லேனிங் என்ஜினியர்ஸ், டேட்டா சயின்டிஸ்ட், க்ளவுட் ஏஐ ஸ்பெசலிஸ்ட் வேலைகளுக்கு ஆண்டுக்கு $150,000 - $200,000 டாலர்களுக்கு மேல் கொடுத்து நிறுவனங்கள் எடுக்கின்றன. இந்திய மதிப்பில் ₹1.91 கோடி சம்பளம் தருகின்றன. இது உள்ளூரில் வேலை பார்ப்பவர்களுக்கே இந்த சம்பளம் தருகின்றன. இன்னும் அதிகப்படியான அறிவு உள்ள இந்திய பட்டதாரிகள் என்றால் ஆண்டுக்கு 10 கோடி கூட கொடுத்து தூக்கி வருகின்றன.
அப்படித்தான் ஐ.ஐ.டி. மும்பை பட்டதாரியான ரிஷப் அகர்வால் என்பவரை மெட்டா நிறுவனம் 9 கோடி ரூபாய் தருவாக அழைத்துள்ளது. ஆனால் அவர் அந்த வாய்பை நிராகரித்துவிட்டு சொந்தமாக ஏ.ஐ. நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 33-வது இடம்பெற்ற ரிஷப் அகர்வால், கூகுள் பிரைன், டீப்மைண்ட், வேமோ உள்ளிட்ட முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். பின்னர் மெட்டா நிறுவனத்தில் சேர்ந்த அவருக்கு ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கொடுக்க முன்வந்தது.
ஆனால் அந்த வாய்ப்பை ஏற்காத ரிஷப் அகர்வால், 'பீரியாடி க் லேப்ஸ்' என்ற ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை இணை நிறுவனராக தொடங்கியிருக்கிறர். இது குறித்து ரிஷப் அகர்வால் கூறுகையில், "மெட்டா நிறுவனம் வழங்க முன்வந்த தொகை, குறிப்பிடப்பட்டுள்ள 1 மில்லியன் டாலரை விட பல மடங்கு அதிகம் தான். ஆனால் ஏஐ நிறுவனம் தொடங்க விரும்புகிறறேன்" என்றார்.
ரிஷப் அகர்வாலின் இந்த முடிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர் நிகேஷ் அரோராவும் ரிஷப் அகர்வாலின் முடிவினை வெகுவாக பாராட்டியுள்ளார்.செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களை தக்க வைத்துக்கொள்ள உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. எனவே கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏஐ மெசின் லேனிங் என்ஜினியர்ஸ், டேட்டா சயின்டிஸ்ட், க்ளவுட் ஏஐ ஸ்பெசலிஸ்ட் வேலைகளை குறிவைத்து படித்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் வரலாம்














Click it and Unblock the Notifications