ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!
சென்னை: நேற்று தமிழகத்தில் 30க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 முக்கிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் மேலும் சில மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த எம். சிவகுரு பிரபாகரன், IAS, தற்போது இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சித்ரா விஜயன், IAS, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக (வடக்கு) மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநராக இருந்த கௌரவ் குமார், IAS, மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த எல். மதுபாலன், IAS முந்தைய நாள் நாமக்கல் ஆட்சியராக மாற்றப்பட்டதை அடுத்து, தற்போது பொதுத்துறை (நெறிமுறை) துணைச் செயலாளராக இருந்த வீர் பிரதாப் சிங், IAS, திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக (வடக்கு) இருந்த கட்டா ரவி தேஜா, IAS, தற்போது கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், IAS, சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக இருந்த சரண்யா அரி, IAS, பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த என். மிருணாளினி, IAS, அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) கூட்டு மேலாண் இயக்குநராக இருந்த எஸ். கவிதா, IAS, திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியத் துறைச் செயலாளர் நியமனம்
ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார், IAS, தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications