வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!
சென்னை: நேற்று முன்தினம் கத்திரி வெயில் முடிந்தது. இருப்பினும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இப்படி இருக்கையில், இன்று வேலூரில் அதிகபட்சமாக 106°F வெயில் பதிவாகியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருக்கிறது. வெயில் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி, திருத்தணி, சென்னை, கரூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், காரைக்கால், ஈரோடு, நெல்லை மற்றும் புதுச்சேரி பகுதியில் வெயில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக வேலூரில் 106°F அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது. வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. முன்னதாக இன்று மதியம் வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில்,
"தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் அடுத்த 3 அல்லது 4 தினங்களில் துவங்கக்கூடும். சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
01-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
02-06-2026 மற்றும் 03-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
04-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
05-06-2026 மற்றும் 06-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
நாளை (01-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications