தரைதட்டிய பிட்காயின்.. மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் செய்த சம்பவம்.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

உலகின் முக்கிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை 69,000 டாலருக்கு கீழே சரிந்துள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் மே மாத இறுதியில் 32 பிட்காயின்களை 2.5 மில்லியன் டாலருக்கு விற்றதாக வெளியிட்டுள்ள தகவல் தான் இந்த சரிவுக்கு அடிப்படையாக அமைந்தது.

விற்கப்பட்ட அளவு மிகவும் சிறியதாக இருந்தாலும், "பிட்காயினை எப்போதும் விற்க மாட்டோம்" என்ற மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனத்தின் நீண்டகால உத்தி மாறியிருப்பது முதலீட்டாளர்களிடையே ஒருவித அச்சத்தை (Panic) ஏற்படுத்தியுள்ளது.

bitcoin USD Dollar crypto Bitcoin Price Crash Below 69000 MicroStrategy Sells Bitcoin Bitcoin Drops 5000 MicroStrategy First BTC Sale Since 2022 Bitcoin ETF Outflows Crypto Market Liquidations Michael Saylor Bitcoin Strategy Bitcoin Support Levels 2026 Coinbase INR Direct Trading Bitcoin Market Sell Off 69000 ETF

இதேவேளையில் அமெரிக்காவின் ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப் (Spot Bitcoin ETFs) திட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக 11 நாட்களாக முதலீடுகள் வெளியேறி வருகின்றன. நிறுவன முதலீட்டாளர்கள் கிரிப்டோவிலிருந்து தங்களது பணத்தை எடுத்து வருவதால் சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து, விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளது.

பிட்காயின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியதும், கிரிப்டோ டெரிவேடிவ்ஸ் சந்தையில் அதிக கடன் (Leverage) பெற்று லாங் பொசிஷன் (Long Positions) எடுத்திருந்த வர்த்தகர்களின் கணக்குகள் தானாகவே மூடப்பட்டன (Liquidation). கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,52,000 வர்த்தகர்களின் 744 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் கைமாறியதால், விலை மேலும் வேகமாகச் சரிந்தது.

இதேவேளையில் காயின்பேஸ் (Coinbase) தளம் இந்திய ரூபாய் (INR) மூலம் நேரடியாக கிரிப்டோ வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்குமான நேரடி பேங்கிங் சேவையை (INR Rails) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியப் பயனர்கள் இடைத்தரகர்கள் அல்லது P2P (Peer-to-Peer) முறைகளைச் சார்ந்திருக்காமல், தங்களின் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது பிட்காயின் விலை சரிவு ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையை பாதித்துள்ளது.

மைக்ரோஸ்ட்ராடஜியின் நடவடிக்கை

மைக்ரோஸ்ட்ராடஜி தற்போது 8,43,706 பிட்காயின்களை வைத்திருக்கும் நிலையில், விற்கப்பட்ட 32 பிட்காயின்கள் மிகச் சிறிய அளவே என்றாலும், இந்த நடவடிக்கை சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 73,000 டாலருக்கு மேல் நிலைத்திருந்த பிட்காயின் விலை இப்போது கிட்டத்தட்ட 5,000 டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

மைக்ரோஸ்ட்ராடஜியின் நிறுவனர் மைக்கேல் சேய்லர், பிட்காயினை எப்போதும் விற்கமாட்டோம் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்போதைய விற்பனை அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இது நிறுவனம் இனி செயல்பாட்டு முறையில் பிட்காயினை நிர்வகிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தை ஆய்வாளர்கள் தற்போது பல முக்கிய ஆதரவு நிலைகளை கவனித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் பிட்காயினுக்கு சுமார் 68,000 டாலர் என்ற உடனடி ஆதரவு நிலை உள்ளது. இதற்கு கீழே விலை மூடினால் சரிவு மேலும் அதிகரிக்கலாம்.

64,000 டாலர் நடுத்தர ஆதரவு நிலையாகவும், 60,000 முதல் 55,000 டாலர் வரையிலான பகுதி முக்கிய உளவியல் ஆதரவு மண்டலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலைகள் உடைந்தால் மைக்ரோஸ்ட்ராடஜியின் இருப்பு கடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த சரிவு கிரிப்டோ சந்தையின் ஏற்ற இறக்க தன்மையை மீண்டும் நினைவூட்டுகிறது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+