வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது
மயிலாடுதுறை: உலகப்புகழ் பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயம் முக்கியமானது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வருகிறார்கள். சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். அப்படித்தான் சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் குடும்பத்துடன் சென்றார். அவருடைய மகளுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த தலம், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதத் தலம் என்றாலும், சாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இங்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள். இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும், நினைத்த காரியம் நிறைவேறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் மொட்டை அடித்தல், மெழுகுவர்த்தி ஏற்றுதல் மற்றும் தங்கம், வெள்ளியிலான உருவங்களை காணிக்கையாகச் செலுத்தி நேர்த்திக்கடன் செய்வது வழக்கமாக உள்ளது. வங்காள விரிகுடா கடற்கரையின் அருகே அமைந்துள்ளதால், ஆன்மீகம் மட்டுமின்றி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. தினமும் பலர் சுற்றுலாவாகவும், ஆன்மீக பயணமாகவும் வருகிறார்கள்.
அப்படித்தான் சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த 47 வயதாகும் அந்தோணிராஜ் (வயது 47) என்பவர் கடந்த மே 30ம் தேதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து கொண்டிருந்தார். இதில் அந்தோணிராஜ் உட்பட 6 பேர் சென்ற காரை உறவினர் சத்தியராஜ் ஓட்டினார்.
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலி என்ற இடத்தில் சென்றபோது அந்தோணிராஜ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மின்னல் வேகத்தில் போய் மோதியது. இதில் காரில் இருந்த அந்தோணிராஜ், அவருடைய மனைவி சங்கீதா (42), மகள் ஹரிணி (20), உறவினர்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான ஹரிணி 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவர் ஆவார். இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications