Vietnam Boat Tragedy: வியட்நாம் படகு விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! யார் அவர்கள்? லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

ஹோனோய்: வியட்நாம் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான இந்தியர்கள் 15 பேரில் 10 பேர் தமிழர்கள், 3 ஆந்திர மாநிலத்தவர்கள், 2 கேரள மாநிலத்தவர்கள். அவர்கள் யார் யார் என்ற பட்டியலும் வெளியாகிவிட்டது. இறந்தவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.

வியட்நாமில் மிகவும் புகழ்பெற்ற தீவு ஃபூ குவோக் ஆகும். இங்கிருந்து சனிக்கிழமையான இன்று ஆன் தோய் துறைமுகத்திற்கு இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு விசைப்படகு ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

Vietnam Boat accident

அந்த படகில் 32 இந்திய பயணிகள், 4 மாலுமிகள் என மொத்தம் 36 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. புறப்பட்டு 400 மீட்டர் தூரத்தில் திடீரென அந்த படகு பழுதடைந்து நின்றுவிட்டதாம். அப்போது அங்கு பலத்த காற்று வீசியதை அடுத்து அந்த படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்தவர்கள் தண்ணீரிலும், பலர் படகிற்குள்ளேயும் சிக்கிக் கொண்டனர். இந்த படகு விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படை, கடற்படை உள்ளிட்ட குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் 15 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார், முருக பிரபு, ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய்குமார், ரவிசங்கர், சந்தோஷ்குமார், பாபு, அழகுராஜ் ஆகிய 10 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஆந்திராவை சேர்ந்த நல்லபேட்டை ஆதிசேஷைய்யா, ஸ்ரீதர் (மற்றொருவர்), ஜெயலட்சுமி ஆகிய மூவரும், கேரளாவை சேர்ந்த அவிகாட் செரியன், லோவேனி ஆகிய இருவரும் பலியாகிவிட்டனர்.

Vietnam Tragedy

இறந்தவர்களில் முருகபிரபு என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் பழனியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தவராம். கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றாராம்.

வியட்நாமில் மழை பொழிவு இல்லாத போதிலும், விபத்து நடந்த நேரத்தில் கடலில் மோசமான சூழல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் சுற்றுலா படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஃபூ குவோக் என்ற தீவு, கல்ஃப் ஆஃப் தாய்லாந்தில் உள்ளது. இது மிகவும் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த தீவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ஹோன் மே ருட் எனும் பகுதியாகும். இந்த இரு இடங்களுக்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் வந்து செல்கிறார்கள். இங்கு வெள்ளை நிற மணல் கொண்ட பச்சை நிறத்தினாலான சுத்தமான தண்ணீர் இருப்பதால் இங்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். வியட்நாம் படகு விபத்தில் பலியானதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+