விதை நெல் கொடுத்துட்டாரு.. இப்ப விளைச்சல் அமோகம்.. சேயோன் பற்றி சந்தோஷமாக பேசிய சிவகார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் தயாரிப்பாளராகவும் திறமையான புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான தாய்க்கிழவி படத்தின் 100 வது நாள் விழாவில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் சேயோன் படம் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்த தாய்க்கிழவி திரைப்படம் திரை உலகத்தையுமே வியக்க வைத்தது. பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, பாலசரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான் என பலர் நடித்திருந்தனர்.

தாய் கிழவி வெற்றி விழா

ஆனாலும் இந்த படத்தில் பெரிய ஹீரோ இல்லை, பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இல்லை. அதிக அளவில் ஒரு செலவிலும் உருவாக்கப்படவும் இல்லை ஆனாலும் கதை மக்களிடம் போய் சேர்ந்தது. குறிப்பாக ராதிகாவின் கேரக்டர் பவுனு தாயாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் 10 நாட்களில் 50 கோடியையும், 25 நாட்களை 75 கோடியையும் கடந்ததாக கூறப்பட்டது.

Sivakarthikeyan Seyon Thaai Kizhavi Sivakumar Radhika Sarathkumar

அதோடு தியேட்டரில் 100 நாட்களையும் தொட்டிருக்கிறது. இப்பல்லாம் ஒரு படம் 2 வாரம் தியேட்டரில் ஓடினாலே வெற்றி விழா நடத்தும் சூழலில் தாய்க்கிழவி 100 நாள் வெற்றி விழா கொண்டாடியது ஸ்பெஷலாக மாறி இருந்தது. அதிலும் இந்த படத்தின் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் கார் பரிசளித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் பேச்சு

அதற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தாய் கிழவி கதையை கேட்ட முதல் நாளே தனக்கு நம்பிக்கை வந்ததாக கூறியிருக்கிறார். சில கதைகளை கேட்டதும் இது எப்படி எடுப்பாங்க? படம் எப்படி வரும் என்று சந்தேகம் வரும். ஆனால் சில கதைகள் மட்டும் கேட்ட உடனேயே மனதிற்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். எனக்கு அதுபோல உணர்வை கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதற்கு பிறகு தாய்க்கிழவி தான் அந்த நம்பிக்கையே கொடுத்து என்று கூறினார்.

ஏற்கனவே இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஒரு மூட்டை விதைநெல்லை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருந்தார். அப்போது பெரிய விளைச்சலை காட்டுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இப்போது நூறாவது நாள் மேடையில் அதைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் அந்த விதை நெல்லின் விளைச்சல் அமோகமாக வந்திருக்கிறது என்று சந்தோஷமாக பேசியிருந்தார்.

சேயோன் பட அப்டேட்

அதோடு நிற்காமல் உங்கள் பின்னால் ஒரு அண்ணனாக நான் எப்போதும் இருப்பேன் என்றும் சிவகுமாரிடம் கூறியிருந்தார். அதற்கு முன்பு மேடையில் பேசிய சிவகுமார் சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு அண்ணனாக மாறி இருக்கிறார் என்றும் சொன்னார். காரணம் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் சேயோன் படத்தையும் சிவக்குமார் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தாய் கிழவி படம் எப்படி இருக்கு? ப்ளூ சட்டை மாறன் ஒரே வரியில் ரிவ்யூ.. சிவகார்த்திகேயனை விட மாட்டார் போல!
இதனால் இவர்கள் இருவருக்கும் ஷூட்டிங்கில் ஏற்பட்ட புரிதலால் அண்ணன் தம்பியாக மாறிவிட்டதாக சிவகார்த்திகேயனும் பெருமையாக சொல்லி இருந்தார். சிவக்குமார் பேசும்போது நான் என்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்த்து பேச முடியாத ஒரு ஆள் என்றால் அது சிவகார்த்திகேயன் அண்ணன் தான் என்றும் தன்னுடைய அன்பை வெளிக்காட்ட, அதற்கு சிவகார்த்திகேயன் கண் கலங்கி இருந்தார். இந்த க்யூட்டான தருணம் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+