Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய் கிழவி படம் எப்படி இருக்கு? ப்ளூ சட்டை மாறன் ஒரே வரியில் ரிவ்யூ.. சிவகார்த்திகேயனை விட மாட்டார் போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்குநராக அறிமுகமாகி, ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இளவரசு, அருள்தாஸ், தம்பி இராமையா, பாலசரவணன், முனீஸ்காந்த், ரேச்சல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம், வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ட்ரெய்லர் மற்றும் க்ளிம்ப்ஸ் மூலம் கவனம் பெற்ற இப்படம், முன்னதாக திரையுலக பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. கமல்ஹாசன் படம் பார்த்து பாராட்டியதும், ஜோதிகா மற்றும் பிரபு உள்ளிட்டோரின் நேர்மையான கருத்துகளும் படத்தின் மீது நேர்மறை எதிர்பார்ப்பை அதிகரித்தன. சமூக வலைதளங்களிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் அதிகமாகவே இருந்தது.

Blue Sattai Maran Sivakarthikeyan

இந்த சூழலில், பிரபல விமர்சகர் (Thaai Kizhavi Blue Sattai Maran Reviews) ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: "தாய் கிழவி படம் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது, சூப்பராக இருக்கிறது என கடந்த 10,15 நாட்களாக ஒரே கூவலாக இருந்தது. கொஞ்சம் உற்று கவனித்தால் இந்தப் படத்தை திடீர் தளபதி (சிவகார்த்திகேயன்) வழங்குகிறார் என இருந்தது.

அவர் உள்ளே நுழைந்தாலே அதில் ஒரு ஸ்கேம் இருக்கும். அவர் நினைத்தால் சோஷியலில் இல்லாததை இருக்கும் என்றும், இருப்பதை இல்லாதது மாதிரியும் செய்ய முடியும். அப்படி ஏதோ ஒரு ஸ்கேம் செய்து சிக்க வைக்கப்போறாங்களோ என்ற பயம் இருந்தது.

அதேபோல் படத்தின் ப்ரோமோஷனை பார்த்தால் ஒரு தண்டட்டி கிழவி கூலிங் கிளாஸ் போட்டு சுருட்டு பிடிக்குது. நாட்டி பாட்டியாக இருக்குமோ; இதனிடம் சென்று மாட்டிக்கொள்ள வேண்டுமோ என இருந்தது.

BlueSattai Maran: போதைபொருள் சர்ச்சை, மனம் நொந்து பேசிய லோகேஷ் கனகராஜ்.. ப்ளூசட்டை மாறன் கலாய் போஸ்ட்
படம் ஆரம்பித்து முதல் பாதியில் இலக்கு இல்லாமல் போனது. பாட்டி கேரக்டரை கொஞ்ச நேரத்திலேயே படுக்க வைத்துவிட்டார்கள். அது நன்றாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் கதையையே புரட்டி போடுவது மாதிரி ஒரு சீன் இருந்தது. அதாவது பெண் விடுதலை பற்றி பெரியார் இத்தனை வருடங்கள் சொன்னதை பாடம் எடுக்காமல் அழகாக செய்தது படத்தின் கலரை மாற்றிவிட்டது.

எல்லா சொதப்பல்களையும் மறக்கடிக்கும் மாதிரி சில நல்ல சீன்கள் இருக்கின்றன. அத்தனை கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் கருமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மொழி பேசுவார்கள். அதனை ராதிகாவால் மேட்ச் செய்ய முடியவில்லை.

Blue Sattai Maran Sivakarthikeyan

அதனால் அந்தக் கேரக்டராகவே அவர் தெரியவில்லை. அந்த ஏரியாவை மட்டும் இயக்குநர் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும். மொத்தத்தில் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்." என்று ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

இவர் வழக்கம் போல சிவகார்த்திகேயனை கலாய்த்து வைத்திருப்பதை பார்க்கவும் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் சிவகார்த்திகேயனை பிடிக்கவில்லை என்று இவர் அவரை கலாய்த்தாலும் படத்தை ஒரு சில இடங்களில் பாராட்டியிருக்கிறார். அதுவே அதிசயம் என்பது போலவும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+