Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BlueSattai Maran: போதைபொருள் சர்ச்சை, மனம் நொந்து பேசிய லோகேஷ் கனகராஜ்.. ப்ளூசட்டை மாறன் கலாய் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு விவகாரம் தான், திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து வெளியிட்டுள்ள கடுமையான கருத்துகள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறிய விஷயங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள், விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் என பலரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

லோகேஷ் பேசியது தான் இப்போது சர்ச்சையின் மையமாக இருக்கிறது. இது பற்றி ப்ளூ சட்டை மாறன் போஸ்டில், "எத்தனை விதவிதமாக உருட்டினாலும், சினிமா மூலம் தொடர்ந்து போதை கலாச்சாரத்தை பரப்பி, இளைஞர்களின் சீர்கேட்டை உண்டாக்கும் படைப்புகளில் உங்கள் படங்கள்தான் முதலிடம். இது குற்றச்சாட்டு இல்லை. இது உண்மை. நீங்கள் ஏற்காவிட்டாலும், இது தான் உண்மை என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று லோகேஷ் கனகராஜை நேரடியாக சுட்டிக்காட்டி பேசினார்.

இந்த கருத்துகள் வெளியானதும், இது ஒரு தனிப்பட்ட விமர்சனமா அல்லது சமூக பொறுப்பை முன்வைக்கும் குற்றச்சாட்டா என்ற கேள்வி எழுந்தது.

Blue Sattai Maran Lokesh Kanagaraj Tamil movie

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் என்ற பெயர் இன்று தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளமாக மாறியுள்ளது. 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' போன்ற படங்களின் மூலம், ஆக்‌ஷன், கேங்க்ஸ்டர் உலகம், வன்முறை, போதைப் பொருட்கள் சார்ந்த கதைக்களங்களை ஒரு ஸ்டைலிஷ் வடிவத்தில் அவர் தொடர்ந்து கையாள்ந்து வருகிறார்.

அவரது படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. குறிப்பாக இளம் ரசிகர்களிடையே, லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு ஒரு தனி கொண்டாட்டம் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், அவரது படங்களில் காட்டப்படும் வன்முறை, மது, போதைப் பொருட்கள், குற்ற உலகம் ஆகியவை தேவையற்ற அளவில் 'கிளாமர்' படுத்தப்படுகின்றன என்ற விமர்சனமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ப்ளூசட்டை மாறன்

ப்ளூசட்டை மாறன் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, "ஒரு இயக்குனரின் படைப்புகள், அவை எவ்வளவு ஸ்டைலிஷ் ஆக இருந்தாலும், சமூகத்தில் குறிப்பாக இளைஞர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பதே.

அவர் சொல்ல வருவது, "இது ஒரே ஒரு படம் பற்றிய விமர்சனம் இல்லை. தொடர்ச்சியாக வரும் படங்களில், போதை கலாச்சாரம் ஒரு 'கூல்' விஷயமாக காட்டப்படும்போது, அது இளைஞர்களின் மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்ற கருத்து தான்.

இந்த இடத்தில், சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகமா, இல்ல சமூக பொறுப்பும் கொண்ட கலை வடிவமா என்ற பழைய விவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

ஜனநாயகனில் கேமியோ.. சென்சார் பிரச்சனை.. ஏ சர்டிபிகேட், பின்னணி பற்றி ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்
இந்த விவகாரம் வெளியானதும், சமூக வலைத்தளங்களில் இரண்டு தெளிவான தரப்புகள் உருவாகியுள்ளன. ஒரு தரப்பு, "லோகேஷ் கனகராஜ் அவர் கதையை சொல்கிறார். இது நிஜ உலகத்தை பிரதிபலிக்கும் சினிமா. இளைஞர்கள் எல்லாம் குழந்தைகள் இல்லை. நல்லது, கெட்டது தெரிந்தவர்கள்" என்று இயக்குனருக்கு ஆதரவாக பேசுகிறது.

மற்றொரு தரப்பு, "தொடர்ச்சியாக வன்முறை, போதை கலாச்சாரம் காட்டப்படும் போது, அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதைப் பற்றி பேசுவது தவறு இல்லை" என்று ப்ளூசட்டை மாறன் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+