ஜனநாயகனில் கேமியோ.. சென்சார் பிரச்சனை.. ஏ சர்டிபிகேட், பின்னணி பற்றி ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்
சென்னை: கூலி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவில் பெரிதாக தலைகட்டாமல் இருந்த நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தன்னைப் பற்றிய பல தகவல்களையும் பேசி இருந்தார். அப்போது ஜனநாயகன் படத்தில் தான் நடித்தது மற்றும் அந்த படத்தில் சென்சார் பிரச்சனை குறித்த கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் "ஹீரோ யார்?" என்று கேட்பதை விட, "இந்த படம் லோகேஷ் கனகராஜ் படமா?" என்று கேட்கும் நிலைக்கு சென்றார் லோகேஷ். 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய திரைப்படங்கள், அவரை ஒரு சாதாரண இயக்குநராக இல்லாமல், இளைஞர்களின் கொண்டாட்ட இயக்குநராக மாற்றியது.

குறிப்பாக விஜய் நடித்த 'மாஸ்டர்'க்கு பிறகு, விஜய் ரசிகர்களில் பெரும்பாலானோர் லோகேஷ் கனகராஜின் தீவிர ரசிகர்களாக மாறினர். அதோடு, அவர் உருவாக்கிய LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்) என்ற கருத்து, ரசிகர்களிடையே ஒரு கல்ட் ஃபாலோயிங் பெற்றது.
இந்த ஹைப் உச்சத்தில் இருந்தபோது, லோகேஷ் இயக்கிய 'லியோ' மற்றும் 'கூலி' திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கதையமைப்பு, நீளமான வன்முறை காட்சிகள், திரைக்கதை தொடர்பான குறைகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விமர்சனங்களை லோகேஷ் கனகராஜ் மறைக்காமல், "இந்த இரண்டு படங்களிலும் நான் சில தவறுகள் செய்துள்ளேன்" என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த சூழ்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் சமீப காலமாக பேசப்பட்டு வரும் 'ஜனநாயகன்' மற்றும் 'கூலி' படங்கள் தொடர்பான பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில், "ஜனநாயகன் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்களா? அந்த படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், "ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை பற்றி இயக்குநர் வினோத் தான் பேச வேண்டும். அந்த படத்தில் நான் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறேன். அதற்குமேல் அந்த விஷயத்தில் நான் பேச முடியாது" என்று தெளிவாக கூறினார்.
அதே சந்திப்பில், 'கூலி' படத்திற்கு வழங்கப்பட்ட A சான்றிதழ் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். "ரஜினி சார் படத்திற்கு எப்படி சான்றிதழ் வாங்கலாம் என்று சென்சார் குழுவினர் கேட்டார்கள். படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில இடங்களில் மியூட் செய்ய சொல்லி, மொத்தமாக 35 கட் சொன்னார்கள். அதனால் நாங்கள் மறுத்தணிக்கைக்கு சென்றோம்.
UA சான்றிதழ் வேண்டும் என்றால் 35 காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். 35 காட்சிகளை வெட்டினால் படத்தில் ஒன்றுமே இருக்காது. அதனால்தான் A சான்றிதழை ஏற்றுக்கொண்டோம்" என்று லோகேஷ் விளக்கினார்.
மேலும், "A சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. அந்த சுதந்திரத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ரஜினி சாரும் எனக்கு கொடுத்தார்கள். அவர்கள் நம்பிக்கையால்தான் அந்த முடிவை எடுக்க முடிந்தது" என்றும் அவர் கூறினார்.
இந்த பேச்சுகள், லோகேஷ் கனகராஜ் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது. ஒருபுறம், அவரது படங்களில் வன்முறை அதிகம் என்ற விமர்சனங்கள்; மறுபுறம், அவர் அதை மறைக்காமல் ஒப்புக்கொண்டு விளக்கம் அளிப்பது-இரண்டையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, "A சான்றிதழ் வேண்டுமென்று எடுத்த படம் இல்லை" என்ற அவரது பதில், சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications