யோகிக்காக களத்தில் இறங்கும் ஆர்எஸ்எஸ்.. 2 நாட்களிலே அகிலேஷை காலி செய்ய மோடி போடும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது. அடுத்தாண்டு நடக்கும் தேர்தலை குறிவைத்து அங்குள்ள கட்சிகள் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளை காலி செய்ய பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒருங்கிணைந்து கை கோர்த்துள்ளது. அகிலேஷின் PDA பார்டனர்ஷிப்பை உடைக்க புதிய திட்டத்தை பாஜக வகுத்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக இப்போதே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தொடங்கி இரு நாட்களுக்கு அவர்கல் மதுராவில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் பாஜகவின் தேர்தல் வியூகம், அமைப்பு ரீதியான பலம், பிரச்சார முறை, எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன.

Uttar Pradesh Election 2027 BJP RSS Akhilesh Yadav

ஆர்எஸ்எஸ்+ பாஜக

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் நாளைய தினம் இந்த ஆலோசனையில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேச யோகி அரசுக்கும் மாநில பாஜக பிரிவுக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, உள்ளூர் கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகியவையும் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னெடுத்து வரும் PDA அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் அரசியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைவர்கள் முக்கியமாக ஆலோசிக்க உள்ளனர். பல்வேறு சாதி மற்றும் சமூகங்களின் ஆதரவை ஒருங்கிணைப்பதுடன், பாரம்பரிய வாக்கு வங்கியை தாண்டி பாஜகவின் செல்வாக்கை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பதிலடி திட்டம்

இந்த கூட்டத்தை மதுராவில் நடத்துவதற்கும் காரணம் உள்ளது. உத்தர பிரதேசத்தின் முக்கிய ஆன்மிக மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றான மதுரா, பாஜகவின் கலாச்சார அடையாளம் மற்றும் சித்தாந்த அரசியலில் தனி இடம் பெற்றுள்ளது. பாஜக அரசின் செயல்பாடுகள், வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவற்றை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பதும் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் வாக்குகளை ஒருங்கிணைக்க முயலும் நிலையில், அதற்கு பதிலாக அனைத்து சமூகத்தினரையும் ஈர்க்கும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை உருவாக்க பாஜக திட்டமிடுகிறது.

ஆர்எஸ்எஸ்

இந்த கூட்டத்தில் சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் அடிப்படையில், கள நிலவரத்தை மதிப்பிடவும், பலவீனமாக உள்ள பகுதிகளில் அமைப்பை வலுப்படுத்தவும் தலைமை திட்டமிட்டுள்ளது.

மேலும், இதில் எஸ்ஐஆர் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது பெயர் இடம்பெறாத தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவும் வகையில் களப்பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்படும். இதில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் ஈடுபட்டு, தகுதியுள்ள வாக்காளர்களுக்கு வழிகாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியம்

இது மட்டுமின்றி சட்டசபை தேர்தலுக்கு எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம், முக்கிய தலைவர்களை பிரச்சாரத்திற்கு எப்படி களமிறக்கலாம், சமூக வலைத்தள பிரச்சாரம், தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. களத்தில் பாஜக மீது அதிருப்தி உருவாகி இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதை ஆர்எஸ்எஸ் மூலம் தகர்ப்பதே இப்போது திட்டமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+