பயிர்க்கடன் தள்ளுபடி.. ஏற்கனவே கடன் கட்டியவர்களுக்கும் சலுகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் கவனத்துக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 30-க்குள் எஞ்சிய கடனை முழுமையாக கட்டி விட்டால் ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைப்பதுடன், அந்த கடனுக்கான வட்டியையும் அரசே ஏற்கும். இதனால் விவசாயிகள் கடன் சுமையை குறைத்துக் கொள்ள, ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது., அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனுக்கான தள்ளுபடி திட்டத்தில் அரசு சில மாற்றங்களை செய்துள்ளது... இதன்படி, தள்ளுபடிக்கு தகுதியான கடன்களுக்கான காலவரம்பு 2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Crop Loan Waiver Scheme Farmers Loan Relief Repaid Crop Loan 75000

கடனை செலுத்தியவர்களுக்கும் சலுகை

கடந்த ஜூன் 19-ம் தேதிக்கு முன்பே பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்திய விவசாயிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், மாதம் ரூ.10,000-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் பெற்ற தகுதியான பயிர்க்கடன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

அதாவது, ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்றிருந்தாலும், அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதியான ஒரு கடனுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். அதுபோலவே, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக பயிர்க்கடன் பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்தில் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும்.

நவம்பர் 30-க்குள் கடனை செலுத்த வேண்டும்

கடந்த நவம்பர் 6-ம் தேதிக்கு முன்பே தவணை தவறி, பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்களது மிச்சமுள்ள கடன் தொகையை நவம்பர் 30-க்குள் முழுமையாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் அவர்களுக்கான தள்ளுபடித் தொகை விடுவிக்கப்படுவதுடன், அந்தக் கடனுக்கான வட்டியையும் அரசே ஏற்கும்.

அதேபோல், நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை தவணை செலுத்த வேண்டிய விவசாயிகளும் நவம்பர் 30-க்குள் எஞ்சிய கடனை செலுத்த வேண்டும். அவர்களுக்கும் உரிய தள்ளுபடித் தொகை கிடைப்பதுடன், வட்டி சலுகையும் வழங்கப்படும்.

சில விவசாயிகளுக்கு அடுத்த தவணை செலுத்த வேண்டிய நாள் நவம்பர் 30-க்கு பிறகு வரலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான தவணை தேதிக்குள் எஞ்சிய கடன் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் உரிய தள்ளுபடித் தொகை விடுவிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடன் கணக்கு வட்டியில்லாமல் நேர் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கலெக்டர் அதிரடி

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகுதி தள்ளுபடிக்கு தகுதி பெற்ற விவசாயிகள் தங்களுக்கான தவணை தேதியை அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த தேதிக்குள் எஞ்சிய கடனை முழுமையாக செலுத்தி உரிய தள்ளுபடி தொகையை பெற்று பயனடைய வேண்டும் என்றும், குறிப்பாக நவம்பர் 30-ம் தேதிக்குள் கடனை செலுத்த வேண்டியவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் கூட்டுறவு சங்கங்களை அணுகி தங்களது கடன் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கலெக்டர் ரேவதி அறிவுறுத்தியுள்ளார்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+