"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் சிறார்களிடையே உள்ள சாதிய வேறுபாடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். மேலும், ஆணவக் கொலைக்கு எதிராக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரங்கேறியுள்ள தொடர் அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் பரபரப்பைக் கிளப்பின.. திருமண வீட்டில் பேனர் வைப்பதில் தொடங்கிய சிறு முன்விரோதம், வன்முறை வெறியாட்டமாக உருவெடுத்துள்ளது. அதாவது ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே கடந்த சில காலமாகவே ஒரு சிறு முன்விரோதம் புகைந்து கொண்டே இருந்துள்ளது.

Anti-Honor Killing Law Tirunelveli Caste Violence

மோதல்

சமீபத்தில் அங்கு நடந்த ஒரு திருமண வீட்டில் பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த மே 28ஆம் தேதி அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் இக்கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அன்றைய தினம் முகமூடி அணிந்து வந்த இந்தக் கும்பல் நெட்டூர் கிராமத்திற்குள் புகுந்து பலரைத் தாறுமாறாக வெட்டி சாய்த்துள்ளனர். இதில் அருள்மாறன், சந்தோஷ்குமார், ராயப்பன், அமல்ராஜ், ரமேஷ், ராம்குமார் ஆகிய 6 பேருக்குக் கொடூரமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

நெட்டூரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய அதே கும்பல், அங்கிருந்து தப்பித் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளது. அங்கு டூவீலர்களை அதிவேகமாக இயக்கியதைத் தட்டிக்கேட்ட முபாரக் (30), அப்துல் ரகுமான் (30) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரு மாவட்ட எல்லையில் நடந்த இந்த இரு கொடூரச் சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே முகமூடிக் கும்பல் என்பது உறுதியானது.

வன்னியரசு

இதில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு, இது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக ஆணவக் கொலைகளுக்கு எதிராக வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வன்னியரசு மேலும் பேசுகையில், "எங்களுக்கு அமைச்சர் பதவியை விட அமைச்சரவையில் இடம் பெறுவதை விடச் சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும்தான் மிக முக்கியம். அதை நோக்கித் தான் நகர்வோம். ஆட்சியில் பங்கு எடுத்துவிட்டோம் என்பதற்காக அதை விட்டுவிட முடியாது. அதுதான் எங்களுக்குப் பிரதானம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளதை வைத்து மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வருவோம். மக்கள் எங்களை ஒரு ரோல் மாடலாக பார்ப்பார்கள். வரும் காலங்களில் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

புதிய சட்டம்

சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் உரையிலேயே இதற்கான கோரிக்கையை வைத்தேன். நான் பேசியதைத் தொடர்ந்து முதல்வரும் இது தொடர்பாகக் குறிப்பிட்டார். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய முன்னாள் நீதியரசர் தலைமையிலான குழுவின் அளித்த அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அதன் அடிப்படையில் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஆணவப் படுகொலைகள் தடுப்புத் தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

சாதிய வன்முறைகளில் இளைஞர்கள்/ சிறார்கள் சிக்காமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், "இது தொடர்பாக இன்று காலை கூட ஆலோசனை நடத்தினோம். சாதிய வன்முறைகளைத் தடுக்கப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம். இடைநிற்றலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

தேவையான நடவடிக்கை

சிறார்கள் சாதிய வன்முறைகளில் சிக்குவதற்குப் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவது ஒரு மிக முக்கியக் காரணம். இதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது. இன்று காலையில் கூட சமூக நீதித் துறை சார்பாக இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்துவதைத் தடுப்பது, அரசு விடுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளை உருவாக்குவது, திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிப்பது, கூடுதல் பட்ஜெட் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம்.

தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லாத ஒரு கல்விச் சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கம். நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கைகளை, விசிக தலைவர் திருமாவளவனின் வழிகாட்டுதலோடு இந்தத் துறையின் மூலம் முழுமையாக முன்னெடுப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+